தமிழர்கள் சந்தேகத்திற்கு பெயர் போனவர்கள்! நல்ல காரியமோ, கெட்ட காரியமோ, ஒரு விஷயத்தில் புதிய கோணத்தில் சிந்திப்பதாக நினைத்து இந்த சமுதாயத்தில் நடைபெறும் நல்ல பல விஷயங்களை விஷக்கண் கொண்டு பார்ப்பது சிலருக்கு வழக்கமாகி விட்டது. பொதுவாக நான் இது போன்ற துர் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்தே வருவேன், ஆனால் இன்று நான் இணையத்தில் முகப்புத்தகத்தில் கண்ட ஒரு பதிவு என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. படிப்பவர்களின் வசதிக்காக அந்த பதிவினை இங்கே ஸ்கிரீன் ஷாட் தந்துள்ளேன்.
ஸ்கிரீன்ஷாட்
வேலுமணி தூயவன் என்பவர் இட்டிருக்கும் பதிவு, அவரது சொந்தக்கருத்தினை பதிவு செய்ய அவருக்கு உரிமை உண்டு, ஆனால் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்வதன் மூலம் அவருக்கு என்ன இலாபம் என்பது எனக்கு தெரியவில்லை. பதிவுக்கு அவர் இட்டிருக்கும் தலைப்பு “நீளும் ஆக்டோபஸ் கரங்கள்”! அடேங்கப்பா என்ன ஒரு கற்பனை வளம்!!
`தொழில்பாதுகாப்புக்குழுவின் மீது இவர் வைத்துள்ள இந்த புகார் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை, ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொழில் பாதுகாப்புக்குழு செய்து வருகின்ற செயல்கள், புராதான சங்கங்கள் கையில் அல்லது பேசவே தயங்கிய மற்றும் கைகழுவிய விஷயங்கள். எந்த ஒரு அரசியல் சாரா அமைப்பும அதன் செயல்திறன் மேம்படும் போது இது போன்ற கருத்துக்கள் பரப்பபடுவது இயற்கை. நண்பர்கள் இதற்கு தகுந்த வழியில் பதிலடி தர வேண்டுகிறேன். இவர்கள் கூறும் வண்ணம் இந்துத்துவ சாயம் கொண்ட அமைப்பாகவே தொழில்பாதுகாப்புகுழு இருக்கும்பட்சத்தில் அதனால் தொழில்துறையினருக்கு எவ்விதத்தில் நஷ்டம் வந்துவிடப்போகிறது? இதுநாள் வரையில் இவர்கள் தனிப்பட்ட முறையில் ஏதேனும் ஜனநாயகமுறைக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார்களா? என்னைக்கேட்டால், திருப்பூரில் இருக்கும் சில அரசு சாரா போது சேவை மற்றும் சொசைட்டி நிறுவனங்களில் முறைப்படி அதாவது சட்டதிட்டங்களுக்குட்பட்டு வருடா வருடம் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் தக்க ஆவணங்களை சமர்ப்பித்து செயல்முறைகளில் பாஸிடிவ்வான செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் அமைப்பினை பொத்தாம் பொதுவாக இவ்விதம் கூறி இருப்பது தவறு.
மேலும் மாற்றம் அணியினரின் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரே தீர்மானிப்பவர்களாக செயல்பட்டனர் என்று கூறியிருக்கிறார், அடப்பாவமே! இது வேறையா?
குஜராத் முதல்வரும், “நிச்சய” பிரதமருமான மோடி ஆவர்களை தொழில்துறையினர் சந்தித்தது பல முதலீடுகளை குஜராத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்ற தலைவரை கண்டு அவரிடத்தில் நமது தொழில்துரையினறது கருத்துக்களை பகிர்தல் நிமித்தமாகவே இருக்கக்கூடும்.! மேலும் ஒரு முதலீட்டாளராக பார்த்தால் நாட்டின் சிறந்த முதல்வரை அணுகுதல் என்பது இயற்கையான ஒன்றே!
அடுத்து திருவாளர் தூயவன் அவர்களது எழுத்து குறிபார்த்திருப்பது சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட “ஸ்ரீபுரம்” அறக்கட்டளை. திருப்பூர் மக்களை திசை திருப்பி அவர்களை “காவி” பக்கம் கவர்ந்திழுப்பது ஸ்ரீபுரம் அறக்கட்டளையினை நிறுவியவர்களுக்கோ மற்றும் அவர்களுடனான குழுவினருக்கோ குறிக்கோள் கிடையாது. மாற்றம் அணியினரது திட்டங்களும், அவர்களது உறுப்பினர்களும பல்வேறு வர்ணக்ககலவையாக இருப்பதாலோ என்னவோ தூயவன் அவர்களது கண்ணுக்கு இப்படி புலப்பட்டிருக்கிறது போலும்! உண்மையை சொன்னால், காவி ஒன்றும் ஒதுக்கப்படவேண்டிய வர்ணம் அல்ல மேலும், காவி இந்தியாவின் வீரப்புதல்வர்கள் நமக்கு விட்டுச்சென்ற வர்ணம். (#வந்தேமாதரம் கதையின் மாந்தர்கள்)
திருப்பூருக்கும், வகுப்புவாத வெறிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது, அதிக பட்சம் போனால் பிள்ளையார் சிலை விவகாரங்களுக்கு மேல் இவ்வூர் மக்களோ, இவ்வூரினை சேர்ந்த அரசியல் தலைவர்களோ போனதில்லை. மேலும் தொழில் நகரமாம் திருப்பூரில் வகுப்புவாத எண்ணத்தினை முன்னிறுத்தி செயல்படுவது என்பது அடிப்படையில் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், இது போன்ற இன்னும் ஓரிரு பதிவுகள் இடப்பட்டால் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் தீய எண்ணத்திற்கான விதை விதிக்கப்படும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
எட்டு கை கொண்ட ஆக்டபஸ், அருமையான உவமானம்! அனால் பாவம் உமது கருத்துக்கு தகுந்த ஆதாரம் சேர்க்க தவறிவிட்டீர்கள் என்றே நான் கருதுகிறேன். பெரியார், கருணா பாணி எழுத்துக்களை அதிகம் படித்தவர் போலும் நண்பர், அடித்து விட்டிருக்கிறார்! மாற்றுக்கருத்து பரப்புரை மூலம் கருத்துக்கள் பதிவிடுதல் நல்லதொரு விளம்பரத்திற்கு பயன்படும் அன்றி விவாதத்திற்கு அல்ல!!
ஸ்ரீபுரம் மற்றும் அதனை சார்ந்தவர்கள் எட்டு கைகள் மட்டுமல்ல, ஆயிரமாயிரம் ஜோடி கண்கள் கொண்டவர்கள் – தீமையும், நன்மையையும் பார்த்து நன்மையை செயல்படுத்த சித்தமாயிருக்கும் கண்கள்!!!
எட்டு அல்ல, ஆயிரம் ஆயிரம் கரங்கள் கொண்டவர்கள், நாடு, ஊர் செழிக்க வேண்டி அனைவரையும் அனைத்துசெல்ல!!!
ஒரு வேளை, இவர் கூறுகிற படி, ஹிந்துத்துவ சார்பு அமைப்பாக இருக்கும்பட்சத்தில், நான் இன்னமும் முனைப்போடு செயல்பட முனைவேன்!
நாங்கள் என்ன பேருந்தை எரித்தோமா? பத்திரிகை அலுவலகத்தை அதன் ஊழியருடன் சேர்த்து கொளுத்தினோமா? அந்நிய சக்திகளுக்கு நாட்டை விலை பேச முயற்சித்தோமா?
கலிகாலத்தில் தேச நலன் என்று பேசினால் அது தீவிரவாதமாக, மத அடிப்படைவாதமாக பேசப்படுகிறது!!!