கடந்த ஆண்டு, பல புதிய வாய்ப்புகளை மடை திறந்த வருடம். எனது கடந்த 2012 ஆம் வருடத்தின் அனுபவத்தினை இங்கே பதிந்துள்ளேன்.
சென்ற வருடம் நான் 2013 ஐ இவ்விதம் கூறி வரவேற்றேன், “On the Shoulders of Giants – Looking Forward to 2013”!!
2013 எனக்கு பல்வேறு வாய்ப்புக்களை தந்த வருடம். நான் கூறியவாறே, “பல ஜாம்பவான்களின் தோள் மீது அமர்ந்து இந்த வருடத்தினை கடந்திடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த வருடத்தில் நான் கடந்து வந்த பாதை மற்றும் முக்கிய நிகழ்வுகளை இங்கே பகிர்ந்துள்ளேன்.
நிகழ்வு 1: எனது தந்தை எனக்கான வாழ்க்கைத்துணையினை தேட ஆரம்பித்தல். எனது கருத்துப்பகிர்வு திருமணம் பற்றி கடந்த ஆண்டு பகிர்ந்தது.
நிகழ்வு 2: இன்டர்நேஷனல் ராமானுஜா அறக்கட்டளையுடன் என்னை இணைத்துக்கொள்ளுவதற்கான வாய்ப்பு. அறக்கட்டளை மூலம் நான் படித்த எங்களது கிராம பள்ளியினை தத்து எடுத்து நிர்வகிக்கும் வாய்ப்பு. இன்று வரையில் பள்ளியின் நிர்வாகப்பொறுப்பில் பல்வேறு மாற்றத்தினை புகுத்தி ஒரு முப்பது வயது இளைஞன் போல சுழன்று எங்கள் கிராமத்தில் பல மாற்றத்தினை விதைத்திட அளப்பரிய செயல்களை செய்து கொண்டிருக்கும் எனது தந்தைக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
நிகழ்வு 3: நான் எனது வாழ்க்கை துணையினை கண்டு திருமணம் செய்துகொண்டது. விஜயலக்ஷ்மி என்கிற காயத்ரி, பேசிப்பழகிய சில நாட்களிலேயே எனக்கான பெண் என எனது தகப்பனாரினால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு என் மனதையும் கவர்ந்த என்னவள்.
நிகழ்வு 4: திருப்பூரில் மாற்றம் என்கிற ஒரு வார்த்தை மூலம் மொத்த தொழில் சமூகத்தினையும் மாற்றுக்கருத்தினை நோக்கி திரும்ப வைத்த திரு.ராஜா சண்முகம் அவர்களுக்கு இணையம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் தேர்தல் பணியில் சேவை செய்தது. மாற்றம் அணியினர் பற்றிய எனது கருத்துப்பதிவுகள் இங்கே.
நிகழ்வு 5: இணைய விற்பனை தளம் ஒன்றினை நிறுவ முயன்று அதில் தோல்வி கண்டது. [www.hidef.com]
நிகழ்வு 6: எனர்ஜி ஆடிட்டிங் மட்டுமல்லாது ஹார்மொனிக் அனலிசிஸ், எனர்ஜி மேனேஜ்மென்ட் மென்பொருள் மற்றும் தகுந்த உபகரணங்கள் சப்ளை செய்யும் முயற்சியில் வெற்றி கண்டது.
நிகழ்வு 7: இந்த ஆண்டு எனது ஆதர்ச நாயகர்களுடன் உடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
நிகழ்வு 8: மாதம் தோறும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை சார்ந்த பதிவுகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத தீர்மானித்து தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். எனர்ஜி ஆடிட் பற்றிய எனது கட்டுரை. தெர்மல் இமேஜ் அனலசிஸ் பற்றிய கட்டுரை.
நிகழ்வு 9: டென்மார்க் நாட்டினை சேர்ந்த தொழில் அமைப்பின் கூட்டமைப்பு திருப்பூரில் EU Eco-label சம்பந்தப்பட்ட செயல்திட்டங்களுக்கு உள்ளூர் ஆலோசகராக என்னை நியமித்தது. இன்னும் செய்ய வேண்டிய செயல்கள் பல உள்ளன.
நிகழ்வு 10: NIFTTEA கல்லூரியின் பல்வேறு பட்ட செயல்திட்டங்களுக்கு என்னாலான கருத்து பகிர்வினை அவ்வப்போது தந்து வருகிறேன். தற்போது நான்கு செயல்திட்டங்கள் கல்லூரிக்கு நிரந்தரமாக ஒரு ரெவின்யு வருவதற்காக தயாரித்துக்கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் பகிர்கிறேன்.
நிகழ்வு 11: எனெர்ஜி மீட்டர்களுக்கான டீலர்ஷிப் எடுத்தது.
நிகழ்வு 12: திருப்பூரில் மாற்றத்தின் பங்காளியாக என்னை “ஸ்ரீபுரம் அறக்கட்டளை” நிறுவனர்கள் என்னையும் இணைத்தது.
நிகழ்வு 13: திருவாரூரில் திருப்பூரின் ஸ்ரீபுரம் அறக்கட்டளையின் “ஒளிவிளக்கு” செயல்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்திய குழுவின் ஓர் அங்கமாக இருந்தது.
நிகழ்வு 12: நித்யமும் எனது மனைவியின் சமையலையும், இசையையும் ரசித்துக்கொண்டிருப்பது.
இந்த ஆண்டில் நான் குறிப்பிடத்தகுந்த பல வாய்ப்புக்களை எனக்கு உருவாக்கி தந்த எனது ஆதர்ச நாயகர்களை இந்த பதிவின் மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஆண்டு எங்களது கிராம பள்ளியின் முன்னேற்றத்திற்கு மாதம் இரண்டு நாட்கள் செலவிட திட்டமிட்டுள்ளேன்.
இந்த ஆண்டினை பொறுத்த வரையில் “வாய்ப்புகளை வசப்படுத்திடு! முன்னேற்றத்தினை முன்னிறுத்து!” என்ற எண்ணத்தினை மனதில் வைத்து செயல்பட திட்டமிருக்கிறேன்.
இந்த ஆண்டு நல்ல பல புத்தகங்களை படிக்க திட்டமிட்டிருக்கிறேன். முறையாக கிடார் இசை கற்றுக்கொள்ள விரும்புகிறேன், அவ்வப்போது அனுபவங்களை பகிர்கிறேன்.
நன்றி!!
பி:கு: நான் ஆங்கிலப்புத்தாண்டினை கொண்டாடுவதில்லை, ஆகவே பிரத்யேகமான வாழ்த்துச்செய்திகளை பகிரவில்லை. நண்பர்கள் மன்னிக்க.