ஆற்றல் மேலாண்மை – சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்

இந்த கட்டுரை, நான் வருகின்ற ஒன்பதாம் தேதி திருப்பூரில் ஏற்பாடு செய்திருக்கிற ஒரு கருத்தரங்கிற்காக தயார் செய்யப்பட்டது.

சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான ஆற்றல் சேமிப்பு மற்றும் ஆற்றல் மேலாண்மைக்கான வாய்ப்புகள் மற்றும் செயல்திட்டம் பற்றி இந்த கட்டுரை மூலம் எனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் நமது செலவீனங்கள் ஏறிக்கொண்டே இருக்கின்றன, குறைந்த செலவில் அதிக உற்பத்தி என்பது சவாலான செயலாக இருக்கின்ற இந்த கால கட்டத்தில் நமது பிரச்சினைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதற்கு தக்க தீர்வினை கண்டறிதல் இன்றியமையாததாகிறது.

எனது முன்னொரு பதிவில் நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பதற்கான வாய்ப்புகளை விபரமாக பகிர்ந்திருக்கிறேன், சுமாராக 10% முதல் 18 வரை ஆற்றல் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அனைத்துமே “கைக்கெட்டக்கூடிய” தூரத்தில்!! நமது ஆடிட்டர் திரு. இராமநாதன் அவர்கள், ஒருமுறை தொழில் நிறுவனங்களில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை பற்றி பேசும் போது “பிரச்சினைகளுக்கான தீர்வுகளும், நமது இலாபமும் நமது நிறுவனத்தின் சுவர்களுக்குள்ளேயே தான் இருக்கின்றன” என்றார்.

அவரது இந்த கூற்று முற்றிலும் சரி, அனுபத்தின் அடிப்படையில் நாங்கள் கண்டதும் அதையே தான். ஒவ்வொரு நிறுவனத்திலும் அவர்கள்  அறியாமலேயே லட்சக்கணக்கான ரூபாய் மாதம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு உள்ளன.  அனைத்துமே குறைவான முதலீடு அல்லது முதலீடு தேவையே இல்லாத வாய்ப்புகள். இந்த கட்டுரையில் நான் பகிரப்போவது அது பற்றிய விபரங்களைத்தான்.

மேற்கத்திய நாடுகளிடையே பரவலாக பேசப்படுகிற ஒரு விஷயம் “Boiling Water Frog Syndrome” தவளையை கொதிக்கும் நீரில் போட நீங்கள் முயன்றால் அது அந்த இடத்தில் இருந்து தவ்வி குதித்து வெளியேறும் அனால்,  ஒரு தவளையை சாதாரண நீரில் போட்டு விட்டு அந்த நீர் உள்ள பாத்திரத்தை சூடுபடுத்தும்போது, அந்த பிராணியானது சூழ்நிலை வெப்பத்திற்கு தகுந்தவாறு தன் உடல் வெப்பத்தினை “அட்ஜஸ்ட்” செய்து கொள்ளும். தவளை குளிர்ரத்த பிராணி, தகவமைப்புக்கேற்றவாறு தன் உடல் வெப்பத்தினை மாற்றிக்கொண்டு வாழும்.

நீங்கள் நீரின் வெப்பத்தினை அதிகப்படுத்தும் போதும் அது அந்த நீரிலேயே இருக்கும், நீரினை கொதிநிலைக்கு கொண்டு செல்லும் போது தவளையால் நிலைமையின் விபரீதம் உணர்ந்து அந்த இடத்தில் இருந்து வெளியார முடியாமல் அங்கேயே அதன் உயிர் நீங்கும் அபாயம் ஏற்படும். எளிமையாக விளக்கும் ஒரு காணொளி கீழே!!!

எப்படி தவளை தனது நிலையை உணர இயலாமல் போகின்றதோ அதே போல நாம் நமது நிறுவனங்களுக்குள்ளேயே இருக்கும் வாய்ப்புகள் பற்றி அறியாமல் இருந்துவிடுகிறோம். உதாரணம் ஏர்லீக்ஸ். ஏர் லீக்ஸ் மட்டுமல்ல இன்னும் பல வாய்ப்புகள் உள்ளன நம் கண்களுக்கு புலப்படாமலே!!!

கைக்கெட்டும் தூரத்திலே இருக்கக்கூடிய வாய்ப்புகள்:LHESO

 

தோராயமாக 10% முதல் 16% வரை ஆற்றல் சேமிப்பதற்கான வாய்ப்புகள் மேலே வகைப்படுத்தப்பட்டுள்ள ஆற்றல் வகைகளில் உள்ளன. இது குறைந்த முதலீட்டில் பெறக்கூடிய பயன் ஆகும்.

முதலில் நாம் பார்க்கப்போவது கம்ப்ரஸ்டு ஏர் (Compressed Air) பயன்பாட்டினை ஆய்வு செய்வதன் மூலம் நாம் பெறக்கூடிய பலன்கள். நம்மில் பலருக்கு  கம்ப்ரஸ்டு ஏர் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு என்றே கூறுவேன். நமது பிராசஸில் கம்ப்ரஸ்டு ஏர் பயன்பாடு பெருமளவிற்கு கிளீனிங்கிற்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது. கீழே தந்துள்ள ஒரு “டிரெண்ட் சார்ட்” பனிரெண்டு மணி நேர கம்ப்ரஸ்டு ஏர் பயன்பாட்டில் எங்கெங்கே சேமிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை “உள்ளங்கை நெல்லிக்கனி” போல நமக்கு காண்பிக்கும்.

Compressed Air Consumption Trend

மேலே பகிர்ந்துள்ள படம் ஒரு டையிங் நிறுவனத்தில் நாங்கள் ஆய்வு செய்த விபரங்கள் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் “தேவையான பயன்பாடு” 95CFM மட்டுமே, ஆனால் அவர்கள் சுமார் 170 CFM வரையில் பயன்பாடு இருப்பது கண்டறியப்பட்டது. சிவப்பு வர்ணமிட்ட நேரங்களில் தேவைக்கும் அதிகமான பயன்பாடு இருப்பதை நாம் காணலாம். மாலை 6:30, இரவு 09:30, பின்னிரவு  12:00, அதிகாலை 06:30, மற்றும் மதியம் 12:00 மணிநேரங்களில் பயன்பாடு உச்சத்தினை தொட்டிருப்பது  கண்டறிந்து, மேலதிக ஆய்வின் மூலம் அந்நேரங்களில் மெசின் ஆப்பரேட்டர்கள் மெசினை தேவை இல்லாமலே கிளினீங் செய்வது கண்டறியப்பட்டு, கிளீனிங் செய்ய வேண்டிய நேரத்தினை வரையறை செய்து குறிப்பிடத்தகுந்த அளவு சேமிப்பினை எட்ட வழிவகை செய்யப்பட்டது.

இதே போன்று கண்ணுக்கு தெரியாத வகையில் ஆற்றல் வீணாகும் ஒரு இடம் “கம்ப்ரஸ்டு ஏர்” லீக்கேஜ் மூலமாகத்தான். ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது 20% முதல் 75% வரை ஏர்லீக்கேஜ் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த மாதம் ஒரு வீவிங் லும் நிறுவனத்தில் ஆய்வின் போது நாங்கள கண்டறிந்த தகவலை கீழே தந்துள்ளேன்.

Compressor Weaving

 

எங்களது ஆய்வு மூலம் ஏர் லீக் மற்றும் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளை செயல்படுத்தினோம். இரண்டு கம்ப்ரசர் மெசினின் ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான ஒரு நாளைக்கு ஆகும் ஆற்றல் பயன்பாட்டில் அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் மாதத்தினை ஒப்பீடு செய்தால் ஆடிட்டிற்கு பின் அதாவது நவம்பர் மாதத்தில் சுமார் 300 kWh Units குறைக்கப்பட்டது.  தோராயமாக ஒரு நாளைக்கு Rs. 1800/- சேமிக்கப்பட்டது ஆண்டுக்கு Rs. 6,50,000/- வரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டது – மிக குறைந்த அல்லது கைக்கெட்டும் தூரத்தில் உள்ள வாய்ப்புகள்.

இது போன்ற வாய்ப்புகள் நூற்பாலை தொடங்கி, ஒரு கார்மெண்ட் தயார் செய்யும் நிறுவனம் வரை எவ்வளவு உள்ளன? அது பற்றி காண்போம்;

 

கைக்கெட்டும் தூரத்தில் உள்ள வாய்ப்புகள் – ஸ்பின்னிங் மில்லில் இது போன்ற செயல்பாடுகள் மூலம் அவர்களது சராசரி ஆண்டு மின்தொகையில் 2% முதல் 3% சேமிக்க இயலும். ஒரு டையிங் நிறுவனத்தில் குறைந்தது 0.5% முதல் 1.5% வரையிலும், ஒரு கார்மெண்ட் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 3.5% முதல் 5.5% வரை சேமிக்க இயலும்.

அதே போன்று, நாங்கள் கண்டறிந்த ஆற்றல் சேமிக்கும் வாய்ப்புகளில் “கைக்கெட்டும் தூரத்தில்” இருக்கக்கூடிய வாய்ப்புகள் குறிப்பாக லீக் அரஸ்ட் செய்வது, மற்றும் கம்ப்ரசர் செயல்திறனை மேம்படுத்துவது போன்ற விஷயங்களின் மூலம் நாம் பெறக்கூடிய பலன்களை கீழே தந்துள்ளோம்.Plug the leak

மிகவும் எளிதான செயல்பாடுகள் மூலம் நீங்கள் ஆற்றல் சேமிக்க இயலும். நாங்கள் பல்வேறு நிறுவனங்களில் செய்த ஆய்வின்படி நாங்கள் கண்டறிந்த ஆற்றல் சேமிக்கும் வாய்ப்பின் மூலம் கிடைக்கக்கூடிய ஆதாயத்தில் நூற்பாலைகளில் மட்டும் சுமார் 20% முதல் 25% ஏர்லீக்கேஜ் சரி செய்வதன் மூலம்  கிடைக்கக்கூடியவை. டையிங் நிறுவனத்தில் 2% முதல் 4% வரையிலும், கார்மெண்ட் நிறுவனத்தில் 8% முதல் 14% வரையிலும் இருக்கின்றன. – Just Plug the Leak!!

இதுவரையில் கம்ப்ரஸ்டு ஏர் லீக் மற்றும் எளிதாக ஒரு “Walk-through Audit” மூலம் நாம் சேமிக்க இயலும் வாய்ப்புகளை பகிர்ந்தோம், அடுத்து மின்சாரத்தில் எந்த அளவுக்கு நமக்கு சேமிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன் என்பதை பார்ப்போம்.

 

மின்சாரத்தில் ஒரு தேர்ந்த எனர்ஜி ஆடிட்டிங் நிறுவனம் மூலம் [அதாவது எங்கள் மூலம் 🙂 ] உங்கள் நிறுவனத்தினை முழு ஆடிட் செய்வதன் மூலம் நீங்கள் பல்வேறு ஆற்றல் சேமிக்கும் வாய்ப்புகளை கண்டறிய முடியும். மேலே பகிர்ந்துள்ள ஆய்வறிக்கை அதை நிரூபணம் செய்கின்றன, நூற்பாலைகளில் 10% ஆற்றல் சேமிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு டையிங் நிறுவனத்தில் 22% முதல் 37% வரையிலும், ஒரு கார்மெண்ட் நிறுவனத்தில் 33% முதல் 40% வரையிலும் ஆற்றல் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, அனைத்துமே ஓராண்டிற்குள் முதலீடு திரும்பக்கிடைக்கும் வகையை சேர்ந்தவை.LHESO

மின்சக்தி சேமிப்பில் எந்த மாதிரியான ஆற்றல் சேமிக்கும் முயற்சிகள் உள்ளன அவற்றை பற்றி காண்போம்.

முதலில் “Power Factor Improvement”

ESOPFI

 

என்னதான் கெப்பாசிடர் பேங்க் வைத்திருந்தாலும், APFC மற்றும் மெசினின் தேவைக்கேற்ப Capacitance இன்ஜெக்ட் செய்யும் விதத்தில் நாம் நூற்பாலைகளில் 3% முதல் 5% வரையிலும், டையிங் நிறுவனங்களில் 3% மற்றும் கார்மெண்ட் நிறுவனங்களில்  5% முதல் 6% வரையிலும் சேமிக்க இயலும்.

வோல்டேஜ் ஸ்டபிலைஸ் செய்வதன் மூலம் சேமிக்க கூடிய வாய்ப்புகள்;ESOVS

 

அடுத்தது, லைட்டிங் லோட் வோல்டேஜ் Optimize செய்வதன் மூலம்,ESOLS

 

டீசல் ஜெனேரேட்டார் பயன்பாட்டினை 90% க்கும் மேல் பயன்படுத்துவதன் மூலம்,

 

மேலே சொன்னவை அனைத்துமே சாத்தியம், நீங்கள் உங்கள் நிறுவனத்தின் ஆற்றல் பயன்பாட்டினை சரியான மீட்டர்கள் கொண்டு அளவிடும் பட்சத்தில். எனர்ஜி மீட்டர்களில் பல வகை உண்டு, Dual Source Meter  நமது நிறுவனங்களின் ஜெனரேட்டார் மற்றும் மின்வாரியத்திலுருந்து பெறப்பட்ட மின் பயன்பாட்டினை ஒரே மீட்டரில் பெறலாம். அதே போல் THD (Total Harmonic Distortion) மீட்டர்கள் மூலம் பவர் குவாலிட்டி சம்பந்தப்பட்ட விபரங்களை நாம் பெறலாம். Basic Energy Meter எனப்படுகிற சாதாரண மீட்டர் நமது பயன்பாடு மற்றும் பிற தகவல்களையும் பெறலாம். இவையனைத்துமே குறைந்த விலையில் தரமான மற்றும் நீண்ட நாட்கள் வரக்கூடிய EAPL பிராண்ட்டில் கிடைக்கிறது. தேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.Challenges

ஆற்றல் மேலாண்மைக்கான எங்களது தீர்வு:

Screen-Shot-of-EMS-672x372

Raman Azhahia Manavalan

2 thoughts on “ஆற்றல் மேலாண்மை – சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்

  1. Thanks for your inputs. All i request is to share this information and published article as much as possible. We will try our level best to reach many people.

  2. Manavalan, its a wonderful presentation but not sure how many of them had an opportunity to go through this… its a pity that people don’t even try in spite of being spoon fed… such an informative presentation Manavalan. Keep rocking..

Comments are closed.

%d bloggers like this: