பூமிக்கு நேரவிருக்கும் மிகப்பெரும் ஆபத்து!!!

ஒவ்வொரு நூற்றாண்டும் மக்கள் ஏதோவொரு வகையில் உலகம் அழிவதை நினைத்து பீதியில் இருப்பது வழக்கம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின் இந்த பயம் – நம்மை ஒரு தேடலுக்கு உட்படுத்தி, எதிர்வரும் ஆபத்துகளை நமக்கு அடையாளம் காண்பிக்கிறது.

யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா – சாண்டாகுருஸ் நடத்திய சமீபத்திய ஆய்வு 1950DA எனும் விண்கல் பூமியினை 886 ஆண்டுகள் கழித்து சரியாக மார்ச் மாதம் 16 ஆம் தேதி 2880 ஆம் வருடம் பூமியின் நீல்வட்டப்பாதையினை கடந்துசெல்கையில் பூமியின்மேல் மோதும் என்று கணித்துள்ளனர்.

விண்கல்லின் படம்:

விண்கல்லின் பிரத்யேக படம். இதன் ஊசலாடும் சுற்றால் பூமியின் வெகு அருகில் வந்து, அட்லாண்டிக் கடலில் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் விழ வாய்ப்பு உள்ளது.

இந்த விண்கல்லானது 1950 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி கண்டறியப்பட்டது, சுமார் 17 நாட்கள் ஆய்வாளர்கள் கண்காணிப்பில் இருந்த விண்கல், கொஞ்சம் கொஞ்சமாக மாயமாகி அரை நூற்றாண்டு கழித்து டிசம்பர் 31 ஆம் தேதி 2000ஆம் வருடம் மீண்டும் ஆய்வாளர்கள் கண்காணிப்பில் தெரிந்தது.

ரேடார் கண்காணிப்பில் விண்கல்லானது ஒழுங்கற்ற ஒரு கோளஉருவிலான 1.1 கிமீ விட்டம் கொண்டதாக அறியப்பட்டது. மேலும் இது 2.1 மணி நேரத்திற்கு ஒருமுறை முழுவதுமாக சுற்றுவதாகவும், இது போன்ற அளவிலான விண்கற்களின் சுற்று வேகத்துடன் ஒப்பீட்டால் இது மிகவும் அதிகம் என்றும் கண்டனர்.

ஆய்வினை மேற்கொண்ட கியோர்ஜினி என்ற அறிவியலாளர் கூறுகையில், “இந்த விண்கல்லானது பூமியுடன் மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் 0.33% என்று கூறுகிறார். ஆனால் இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கூறியிருக்கிறார்.
இது போன்ற விண்கல் மோதிய நிகழ்வுகள் பல முறை பூமிக்கு நடந்துள்ளன, 1950DA அளவு விண்கல் பூமியினை சுமாராக 600 முறை மோதியிருக்கக்கூடும். தற்போதைய சூழலில் இந்த விண்கல் பூமியினை கடந்து செல்வதையும், பூமியில் மோதினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் ஒரு சிமுலேஷன் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த விண்கல் அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்க கடற்கரையில் இருந்து 360 மைல் தொலைவில் விழும் என்று அனுமானித்திருக்கின்றனர்.

விண்கல்லின் 60,000 மெகா-டன் மோதல் விண்கல்லினை முற்றிலும் பஸ்பமாக்கிடும், மேலும் இந்த மோதல் கடலில் பதினோரு மைல் அளவான பள்ளத்தினை தோற்றுவிக்கும், இதன் விளைவாக கடல் பரப்பில் பெரும்மாற்றம் ஏற்படும் மேலும் பெரிய அளவிலான கடல் நீர் மேலேழும்பப்படும் – சுனாமி தோன்றியதைவிட் பன்மடங்கு அளவில்… முதல் மூன்று நிமிடங்களில் இந்த அலைகள் எழும்பி, அட்லாண்டிக் பெருங்கடலின் முழுமைக்கும் பரவும் என்று கணித்திருக்கிறார்கள். விண்கல் மோதல் நிகழ்ந்து இரண்டு மணிநேரம் கழித்து சுமார் 400 அடி உயரத்திற்கு கடல் அளளிகள் எழும்பும் (விண்கல்லின் பிரதான மோதலினால் எழுந்த மூன்றடி உயர அலைகள் பரவும்போது சுனாமி போன்றதொரு) மேலும் அடுத்த நான்கு மணிநேரத்தில் குறைந்தது அலைகளின் உயரம் 200 அடியாக குறைந்து, கிழக்கு கடற்கரை முழுமையையும் ஆக்கிரமிக்கும், சுமாராக 8 மணி நேரம் கழித்து ஐரோப்பாவினை 30-50 அடி உயர அலையாக அடையும். இந்த மோதலினால் ஏற்படும் நிகழ்வுகளை கணினி சிமுலேஷன் மூலம் கீழ்கண்ட வீடியோவில் காணலாம்.

இந்த நிகழ்வானது அடுத்த தொடர் நிகழ்வான, கடல் மட்டத்தில் நிலச்சரிவு, மற்றும் அடுத்த தொடர் சுனாமிகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கும் என்று கூறியுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தில் சிறிய விண்கல் கடலில் மோதுவதை கூட கண்டறிந்து “முன்கூட்டிய எச்சரிக்கை” அளிக்க இயலும். கிரகங்களை பற்றிய ஆய்வாளர்கள் பூமியின் நீள்வட்டப்பாதையில் வளம் வரக்கூடிய 90% எரிகற்களை கண்டறியும் ஆய்வில் குறிப்பிடத்தகுந்த அளவில் சுமார் ஐம்பது சதம் நிறைவேற்றியுள்ளனர்,

பூமியின் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய விண்கற்கள் – ஆபத்து அள்ளிக்கக்கூடியவை என்ற வகைப்படுத்தப்பட்டவை.

இந்த ஆய்வு முழுமை அடையும் போது நமது பூமியின் பாதையில் குறிக்கிடும் கற்களை நாம் விரிவாக அறிந்து அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலும் தவிர்க்க இயலும் என்று தெரிவிக்கிறார்கள்.

சுனாமி – விண்கல்லின் மோதல்

இன்னமும் விண்கல்லினை பற்றிய மேலதிக ஆய்வுகள் நடைபெறாத நிலையில் அதன் பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னமும் சரியாக கூற இயலவில்லை.

ஆனால் நாசாவின் அறிக்கையின் பிரகாரம் ஒரு விண்கல்லானது பூமின் மீது நேரடியாக “இம்பாக்ட்” அதாவது மோதுவதேன்பது பல்வேறு செயல்பாடுகள் மூலம் நிகழாமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று.
http://www.dailymail.co.uk/embed/video/1112958.html
இந்த விண்கல்லினை பொறுத்த வரையில் நீண்ட காலஅவகாசம் நமக்கு கிடைத்திருக்கிறது. இது விண்கல் ஆராய்ச்சிக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த பேரழிவினின்று எப்படி பூமியை காப்பாற்றிக்கொள்வது?

ஒரு விண்கல்லின் மேற்பரப்பில் இருக்கும் பாறைகளின் தன்மை, அதன் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டு அதனை இன்னும் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தி அதன் பயண திசையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

இன்னும் 35 தலைமுறைகள் கழித்து புதிய தொழில்நுட்பம், அல்லது மேம்பட்ட அறிவு கொண்டு இந்த விண்கல்லினை எளிதாக அதன் பயணப்பாதையை மாற்றுவதோ அல்லது சூரியன் அதன் வேலையை செய்யும் வண்ணம் விண்கல்லின் மேல் கண்ணாடி மணிகளை தூவுதல் அல்லது சூரிய படகு (Solar Sail) கொண்டு விண்கல் மேற்பரப்பில் மோதி சூரியப்படகின் பிரதிபலிக்கும் தன்மையை விண்கல்லுக்கு செய்து, அதனை அதன் பாதையில் இருந்து வெளியேற்றும் வழிமுறைகள் செய்யப்படலாம்.

எதுவாயினும் இன்று கவலைப்படவேண்டியதில்லை!

1. ஆய்வு கட்டுரை: நாசா

2. விரிவான அறிவியல் ஆய்வு கட்டுரை

Advertisements

Leave a Reply