இன்று ஆப்பிள் நிறுவனமானது தங்களது புதிய தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டில் சிறந்ததாக அறியப்படுகின்ற “ஐ வாட்ச்” அறிமுகம் செய்கின்றனர். அமெரிக்க நேரப்படி காலை 09:00 நமது நேரப்படி இன்று இரவு ஒன்பது மணியளவில். இந்நிகழ்வானது ஸ்டீவ் ஜாப் இறந்த பின்னர் நிகழ்கின்ற மூன்றாவது (?!) நிகழ்ச்சி, இதன் நேரடி ஒலிபரப்பினை அவர்களது இணைய தளம் மூலம் காணலாம். எனது கட்டுரை ஆப்பிளின் கடிகாரம் பற்றி அல்ல, நமது தொழில்நுட்ப பரிணாமத்தில் கடிகாரம் எவ்வகையான மாற்றத்தினை கண்டு வருகிறது என்பது பற்றி.
1970களில் கைகடிகாரமானது டிஜிட்டலாக அறிமுகமாகிறது, கூறப்போனால் 1980 களில் நிகழப்போகின்ற கணிப்பொறி புரட்சிக்கான விதை டிஜிட்டல் கை கடிகாரம் என்றே கூறலாம்.
இன்று மீண்டும், பெரும்பாலான மின்னணு நிறுவனங்கள் அணியக்கூடிய வகையிலான பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்துகின்றனர்.
முற்றிலும் எந்த வகையிலும் மனிதனால் நீட்டிக்கவோ, மாற்றவோ இயலாத நேரத்தினை பற்றியும், 1972 களில் நடந்த டிஜிட்டல் வாட்ச் தொழில்நுட்பம் பற்றிய சுவாரஸ்யமான இந்த சிறிய வீடியோ. (1972)
1972 களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கடிகாரத்தின் விலை சுமார் 2100 USD. இன்றைய ஆப்பிளின் சந்தைப்படுத்தப்படும் பொருட்களைப்போலவே அன்று இந்த கடிகாரத்திற்கும் அதன் நிறுவனத்திற்கும் இருந்தது. “பல்சார்” “Pulsar” என்ற நிறுவனமானது அன்றைய காலகட்டத்தில் சுமார் 25பில்லியன் டாலர் வருமானம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. LED வாட்ச் களுக்கான சந்தையை அறிமுகப்படுத்திய பல்சார் நிறுவனத்தின் அன்றைய நிகழ்வு, ஆப்பிளின் இன்றைய கடிகார நிகழ்விற்கு சற்றும் குறைந்தது இல்லை என்றே நான் கருதுகிறேன்.
Pulsar: http://www.pulsarwatchesusa.com/pulsar-today/
இன்றைய காலகட்டத்தில் கடிகார முள் போன்றே மீண்டும் முன்னணி கணினி நிறுவனங்கள் கை-கடிகார சந்தையை குறிவைத்து இறங்குகின்றன, மேம்பட்ட பயன்களுடன்.