திருப்பூர் பற்றிய நிலைவளர்ச்சி மாற்றம் குறித்த உலகளாவிய பார்வை (Sustainable Development)

கடந்த மாதம் ஒரு ஆங்கில தினசரியில் திருப்பூர் பற்றியும் அதன் தொழிலாளர் நிலைகள் பற்றியும் நீண்ட கட்டுரை வெளிவந்தது.

கட்டுரைகளை இங்கே படிக்கலாம்:

 1. Captured By Cotton [Discuss Child labour Issues]
 2. Environmental Crisis in your Closet

ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி ஸ்பின்னிங் மில் பற்றியும், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பெயர்களோடும், ஆதார விபரங்களோடும் கட்டுரை வெளிவந்தது. அது பற்றி தொழில்துறையினரிடையே மிகுந்த கார சாரமான விவாதங்களும், அந்த கட்டுரை ஆசிரியரை கண்டிக்கும் வண்ணம் பல மெயில் பரிமாற்றங்களும் நடைபெற்றன.

ஒவ்வொரு முறையும் உலகின் ஏதோவொரு பகுதியில், இது போன்ற கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன.

திருப்பூரினை பற்றிய “பாஸிடிவ்” செய்திகள் வருகின்றனவா?? ஒன்றிரண்டு… அவைகள் இங்கே;

 1. Sustainability (Tags)
 2. Little Monster in your Closet (Finding: No Harmful Contents found in Garments made from Tirupur) How many of us know this fact? (Read the Hyperlinked article Part 1 & Part 2)
 • சமூக ஆர்வலர்கள் எழுதும் கட்டுரைகளை நாம் கண்டித்தால் மட்டும் போதுமா?
 • நமது நிறுவன வளர்ச்சியினை கருத்தில் கொண்டு நாம் இது போன்ற கட்டுரைகளோ, அல்லது அரசு சாரா அமைப்புகளோ நம்மை கேள்விக்குள்ளாக்கும் பொழுது நாம் அதனை எவ்விதம் எதிர்கொள்ள வேண்டும்?
 • ஒவ்வொரு முறையும் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் தான் என்ன?
 • திருப்பூரில் கடந்த சில வருடங்களாகத்தான் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன, திருப்பூரின் “பிராண்ட்” அதாவது – “கட்டற்ற நிலையான வளர்ச்சி” (Sustainable Development) என்பதாக பல ஆடை நிறுவனங்கள் தங்களது பொருள் உற்பத்தி சங்கிலியில் பல்வேறு செயல்திட்டங்களை “சான்றிதழ்களும்” செயல்முறை வடிவங்கள் மூலமாக செய்து வருகின்றன. இவற்றினை நாம் முறையாக ஆவணப்படுத்துகிறோமா?
 • இவற்றை செய்வது எப்படி? யார் மூலமாக?

முதலில் திருப்பூர் பற்றிய சர்வதேச அளவில் கருத்துக்கள் எப்படியிருக்கின்றன:

 • நொய்யல் நதியினை மாசு படுத்தியதும்,
 • அதன் மூலமான ஒரத்துப்பாளையம் அணைக்கட்டும்,
 • மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட “ஜீரோ டிஸ்சார்ஜ்” கட்டுப்பாடும்,
 • இதனை பின்பற்ற முடியாமல் இழுத்துமூடப்பட்ட சாயப்பட்டறை பற்றியும்,
 • சட்ட விரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகள் பற்றியும்,
 • அங்கே வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நிலையும்,
 • ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பின்பற்றப்பட்டு வரும் வேலை நேரம் பற்றியும்,
 • அவர்களுக்கான வசதிகள் குறித்தும்,
 • நிறுவனத்தின் பாதுகாப்பு,
 • அங்கு வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பு,
 • குழந்தைகளுக்கான வசதிகள்,
 • நூற்பாலைகளில் இருக்கும் கட்டுபாடுகள்,
 • அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் நிலைமை என்று இந்த பட்டியல் நீளும்.

எந்த ஒரு தொழில் நிறுவனமும் முற்றிலும் சமூக அக்கறையோடு தொழில் புரிவதென்பது “ப்ரீ மார்கெட்” பொருளாதார நிலையில் சாத்தியம் குறைவான ஒன்று. ஆனால் நமது திருப்பூரில் இருக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு முறை சிக்கல் எழும்போது அதனை தீர்வு கண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச்செல்லும் ஆற்றல் கொண்டவர்கள் என்பது நாம் அறிந்ததே.

ஆனால் சர்வதேச அரங்குகளில் எழும் மறைமுக பொருளாதார அழுத்தம், பத்திரிக்கை மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், பசுமைப்போராட்ட இயக்கங்கள் மூலம் எழும் சில மறுக்க முடியாத வகையில் இருக்கும் சவால்களை சந்திப்பது இன்றைய தலைமுறையினருக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

கொஞ்சம் மாற்று சிந்தனையோடு அணுகலாம்:

சிந்தனைகள் கேள்விகளாக:

 1. எனது நிறுவனத்தின் நிர்வாகம் உலகளாவிய சந்தையின் உள்வகுக்கப்பட்ட நெறிமுறைகளும், உள்நாட்டின் நெறிமுறைகளும் பின்பற்றும் வகையில் இருக்கிறதா? அதற்கான பாலிசிகள், செயல்திட்டம், வழிகள்  இருக்கின்றதா?
 2. எனது நிறுவனத்தின் பணியாளர்கள், நிறுவனமும் முறையான “மனிதஉரிமைகள்” படி பாதுகாப்பு, பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவம், சமமான உரிமைகள், மற்றும் இன்ன பிற
 3. தொழிலாளர்களுக்கான ILO  விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?
 4. சுற்றுப்புற சூழல் மீதான அக்கறை, எடுத்து வரும் செயல்பாடுகள், உற்பத்தியால் ஏற்படுகிற பாதிப்புகள் மற்றும் அதனை நிகர் செய்யும் நடவடிக்கை குறித்த செயல்பாடுகள்.
 5. லஞ்ச லாவண்யம் இல்லாத நிலை இருக்கிறதா? (நிறுவனத்தின் செயல்களில்)

மேலே சொன்ன ஐந்து கேள்விகளும் மிகவும் சாதாரண கேள்விகளாக தெரியலாம் ஆனால் “ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள – உலகளாவிய ஒப்பு சுய பரிசோதனை” படி அமைந்துள்ள சுமார் 45 கேள்விகள், இந்த கேள்விகளுக்கான பதில்கள் அனைத்துமே நம்மை பகுப்பாய்வு செய்யக்கூடியவை. பகுப்பாய்வு மட்டுமின்றி அதன் வெளியீடாக இன்றைய நிலையினையும், நாம் செய்ய வேண்டிய செயல்களுக்கான அடிப்படையில் “ஒப்பீட்டு மதிப்பெண்” வழங்கப்படும். இது UNHRC யின் சுய பரிசோதனை என்பதால் இதற்கான மதிப்பும் உலகளாவிய சந்தையில் அதிகம்.

தேர்ந்த ஒரு மனித வள மேலாளர் கொண்டு இதனை திருப்பூரின் ஒவ்வொரு நிறுவனமும் சுய பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம், நமது நிறுவனத்தின் இன்றைய நிலையினை உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்து ஒட்டு மொத்த திருப்பூரின் நிறுவனங்களுக்கும் ஒரு “பெஞ்ச்மார்க்” செய்ய இயலும்.

இது செய்வதற்கும், சமீபத்திய திருப்பூரை பற்றிய மோசமான எழுதப்படும் கட்டுரைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்கள்?

சமீபத்திய மனித உரிமை ஆய்வுகளின் படி, உலகளாவிய அளவில் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள உற்பத்தி நிறுவனங்களில் பின்பற்றப்படும் மனித உரிமைகள் குறித்தான செயல்பாடுகள் – ஒரு “பாதுகாவல் அதிகாரி போல இருந்து செயல்படுத்த இயலாது என்றும், இவைகள் சுய பரிசோதனைகளின் படி தாமாக முன்வந்து நிறுவனங்கள் ஏற்று செயல்படுத்த வேண்டும், அப்படி செய்தால் தான் “நிலையான கட்டற்ற வளர்ச்சி” என்பதை அடைய இயலும் என்பது பல்வேறு நிபுணர்களின் கணிப்பு.

ஆக, நமது நிறுவனத்தின் மனிதஉரிமைகள் மற்றும் சுய பரிசோதனையின் மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கை நமது நிலையினை தெளிவாக தரும் பட்சத்தில், அதனை மேம்படுத்தும் செயல்முறைகளை நாம் எப்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் மேம்படுத்துகிறோம் என்பதை நாம் அறிவித்தால் போதுமானதாக அமைகிறது.

இதன் மூலம் நாம் ஒட்டுமொத்த தொழில்துறையினருக்கும், நம்மிடமிருந்து பொருள் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும், அந்நாட்டில் இருக்கும் அரசு சாரா, பத்திரிகை, ஆர்வலர்களுக்கும் ஒரு தீர்க்கமான நிலையினை அறிவிக்க முடியும்.

எதற்கு சமூக ஆர்வலர்களும், பத்திரிகை நண்பர்களும் நமது பின்வாசல் வழியாக வந்து நம்மை ஆய்வு செய்ய வேண்டும்? அவர்களை நமது விருந்தினர்களாக அழைத்து நமது அறிக்கை மூலம் அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே?

இதை யார் எப்படி செய்யலாம்?

முதல் கட்டமாக திருப்பூர் தொழில் அமைப்புகள் இதற்கான விழிப்புணர்வு செயல்களில் ஈடுபடலாம். ஒன்றிரண்டு கூட்டங்கள் மூலம் விருப்பம் உள்ள நிறுவனங்கள் முதலில் தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த பகுப்பாய்வினை நடத்தி அதன் மூலம் பெறப்படும் அறிக்கையின் படி நிறுவனங்கள் அவர்களின் செயல்திட்டங்களை வகுக்கலாம். இதற்கு தக்க மனிதவள ஆலோசகர்களை அறிமுகப்படுத்த நாங்கள் (VRNC/Partners) தயாராக இருக்கிறோம், திருப்பூர் நிறுவனங்கள் தயாரா?

Banneer Updated


Linked in profile

Raman Azhahia Manavalan

%d bloggers like this: