World Bank Report on “Stitches to Riches? : Apparel Employment, Trade, and Economic Development in South Asia”

Stitches 2 Riches

World Bank Group recently published a report named “Stitches to Riches” explores how South Asia’s growing Population can be given with better Job and Potential for high labour intensive apparel market to go for more expansion, it also points out the increasing costs of Chinese Apparel Production. The report details and recommends “Policy level” directives. This post will discuss on the “Excerpts” of the WB Report. 

அறிக்கையின் முக்கிய விஷயங்கள்:

  1. தெற்காசிய நாடுகள் தங்களது அதகரித்து வரும் இளைஞர்கள்/இளைஞிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகப்படியான வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
  2. ஆயத்த ஆடை தொழில் தற்போது மற்ற உற்பத்தி தொழில்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்படுத்தும் தொழில்நுணுக்கங்களை கொண்டுள்ளது.
  3. உற்பத்தி தொழில்களில் – அப்பரேல்ஸ் தற்போது 40% வேலைவாய்ப்பினை வழங்கிவருகிறது. இந்த சதவிகிதம் அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

img4

  1. இத்துனை இருந்தும் ஆயத்த ஆடை தொழில் அதன் முழு திறனுக்கான வளர்ச்சியை எட்டவில்லை என்பது உண்மை, அதன் காரணங்கள் – போட்டித்திறன்மேம்பாட்டில் திறனின்மையே காரணம். (Inefficiencies in Competitiveness)
  2. அடுத்த முப்பது ஆண்டுகளில் மாதம்தோறும் பத்து லட்சம் பேர் வேலைவாய்ப்பிற்காக தயாராக இருக்கும் நிலையில், நாடுகள் “கொள்கை” சார்ந்த முடிவுகள் எடுக்கவேண்டியது அவசியம். ஆயத்த ஆடை தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பதற்கான, இந்த வாய்ப்பு தெற்காசிய நாடுகளுக்கு இன்றியமையாத, அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
  3.  ஏற்றுமதி சார்ந்த ஆயத்த ஆடை உற்பத்தி – நீண்ட கால முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய பங்காக இருக்குகிறது. மிக குறைந்த திறன் பயிற்சிகளுடன் வேலை வாய்ப்பிற்கு உத்திரவாதம் அளிக்கும் துறையாக இருக்கிறது. அதிகப்படியான பெண் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் துறையாகவும் இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மற்ற பிற துறைகளை காட்டிலும் ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

slide_5

  1. உலகளாவிய ஆடை வணிகத்தில், ஏற்கனவே பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகள் கணிசமான முதலீடுகளை செய்துள்ளன.
  2.  தற்போது, உலகளாவிய ஆடை வணிகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நிலை மாறுவதற்கான வாய்ப்புகள் இனி வரும் ஆண்டுகளில் இருக்கும். சீனாவின் அதிகரித்து வரும் “உற்பத்தி செலவினங்கள்” முதலீட்டாளர்களை பிற ஆடை உற்பத்தி நாடுகளை நோக்கி செல்ல வைக்கிறது. (கம்போடியா, வியட்நாம்)
  3. சீனாவின் இந்த நிலை, தெற்காசிய நாடுகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைகிறது.

உலக வங்கியின் அறிக்கையில் இருக்கும் முக்கிய விபரங்கள்:

  1. தென்கிழக்காசிய நாடுகள் (கம்போடியா, இந்தோனேசியா, மற்றும் வியட்நாம்) அவர்களின் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதி (Overall Export Performance), பொருட்களின் பன்முகத்தன்மை (Product Diversity) மற்றும் உலகளாவிய சந்தையின் வாடிக்கையாளர்களுக்கு தேவையான “செலவு சாராத” காரணிகள் (Non-Cost Related Factors) ஆகியற்றில் தெற்காசிய நாடுகளான பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், மற்றும் ஸ்ரீலங்கா வற்றை விட சிறப்பாக செயல்படுகின்றன.
  2.  உலக வங்கியின் அறிக்கை பரிந்துரைப்படி சீனாவின் ஆடை செலவீனங்களில் 10% அதிகமாகும் பட்ச்சத்தில், தெற்காசிய நாடுகளின் ஏற்றுமதியானது 13-25% அதிகமாக வாய்ப்பு உள்ளது. இருப்பினும், தென்கிழக்காசிய நாடுகளின் ஏற்றுமதியானது 37-51% வரை அதிகரிக்கிறது, இது தென்கிழக்காசிய நாடுகளின் வாய்ப்புகளை விட அதிகம்.

stitches_chart

  1.  உலக வங்கியின்  அறிக்கையானது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஸ்ரீலங்கா ஐரோப்பிய யூனியன் வாய்ப்புகளை கவரக்கூடும் என்று தெரிவிக்கிறது.

உலக வங்கியின் அறிக்கை அளிக்கும் பரிந்துரைகள்:

  1. ஆயத்த ஆடை உற்பத்தியினை கொள்கை வகுத்து நெறிப்படுத்தி முன்னேற்றம் காண தெற்காசிய நாடுகள் வழிவகை செய்யவேண்டும். குறிப்பாக கொள்கை முடிவுகளில் முன்னேற்றம் காண “சிக்கல் நிறைந்த” “பாட்டில்நெக்” களை அறிந்து அதை களைய வழிவகை செய்யவேண்டும்.  குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளுடன் (கம்போடியா, வியட்நாம் போட்டி நாடுகள்) தெற்காசிய நாடுகளின் திறன்களை ஒப்பீடு செய்து தெற்காசிய நாடுகள் முன்னேற்றம் காண வழிவகை செய்யவேண்டும்.

sar_0

  1.  செயற்கை நூலிழைகளுக்கான வாணிக தடைகளை நீக்குதல், எளிதான செயற்கை இழை வாணிபத்திற்கான செயல்முறைகளை செயல்படுத்துதல்,
  2. ஒட்டுமொத்த மதிப்புகூட்டப்பட்ட  உற்பத்தி முறையில் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியினை ஒருங்கிணைத்தல்,
  3. சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த இணக்கங்களை (Compliance) மேம்படுத்துதல், இதனை தேசிய அளவிலும் அரசின் பாலிசி சார்ந்த முடிவுகள் மூலமாகவும்,

மேலே சொன்னவை அனைத்தும் முக்கியமான கருத்துக்கள், சில விபரங்கள், அறிக்கையின் பக்கங்களில் இருந்து இங்கே பத்தி விட்டிருக்கிறேன், தொழில்துறை மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கும், துறை சார்ந்த வல்லுனர்களுக்கும் மிகவும் பயனுள்ளய்தாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தொழிலாளர் சம்பள விபரங்கள்,

img5

Need to Diversify Products:

International Concerns on Working Conditions, Still the “Sumangali Scheme” is being discussed, will the Industry Stakeholders take this thing serious and pay more attention to spread the Positive News about Employing Resources & Working Conditions of Spinning Mills of Tirupur to the World?

Very Interesting Data Analysis & Estimate, – Effect of 10% Rise in Chinese Prices and Impact on South Asian Countries Exports.

 

Policy Inputs from WBG Report:

Inputs on Labor Costs & Comparison.

Non-Cost Factors to Consider for Improvement:

Competitiveness – Benchmark & Buyer’s Perception on Non Costs Areas of South Asian Countries & Southeast Asian Countries.

India – Scope for Investment on Trims?

WBG Report’s inputs on Environmental Compliance & Sustainability:

Inputs for Exploring New Markets:

Size & Significance of Textile & Apparel Industries

WBG Report Mentions and Appreciates Bangladesh Industry Associations,

Interesting Estimate on Increase in Chinese Costs and  US Imports

Schematic Inputs on Policy Inputs Needed in Apparel Supply Chain.

Analysis on Import Tariff:

Key Points to Take away from the Report – For Manufacturers.

  1. Product Diversity
  2. Market Diversity
  3. Improve Productivity
  4. Lead Time Reduction

References & Reports:

  1. Key Findings on the Report by Annette Dixon – World Bank Vice President for the South Asia Region
  1. Key Findings on the Report by Annette Dixon – World Bank Vice President for the South Asia Region
  2. Stitches to Riches?Apparel Employment, Trade, and Economic Development in South Asian
  3. https://openknowledge.worldbank.org/handle/10986/23961
  4. http://www.worldbank.org/en/news/press-release/2016/04/28/apparel-manufacturing-has-potential-to-create-1point2-million-new-jobs-world-bank-report

Raman Azhahia Manavalan

%d bloggers like this: