மின்கசிவு மற்றும் ஷார்ட்சர்க்யூட் தீ விபத்துக்கள் ஒரு அலசல்.


மின்சார ஷார்ட்சர்க்யூட் மூலம் ஏற்படும் தீ விபத்துகள் குறித்தும் அதனை தொழில்துறையினர் எவ்விதம் வருமுன் காப்பது என்பது குறித்த கட்டுரை


Visit Our Website

தீ நாம் சந்திக்கும் விபத்துக்காரணிகளில் மிகப்பழமையானதும் அதிகம் காரணம் அறியப்படாத ஒன்றும் ஆகும். இன்றும் தீ விபத்துக்கள் மூலம் உயிர், உடமை மற்றும் பொருள் சேதாரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களில், தொழில்கூடங்களில், வணிகவளாகங்களில், மருத்துவமனைகளில், கூட்டம் அதிகள் சேரும் இடங்கள் என பல்வேறு இடங்களில் கோர தீவிபத்துக்களை கண்டிருக்கிறோம். இந்த தீ விபத்துக்களின் மூல காரணம் என்ன? தீவிபத்தினை தடுக்க நாம் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்விகள் ஏன் மனதில் எழுந்ததன் பதில் தான் இந்த கட்டுரை.

 1. முதல் காரணம், வெளிப்படையாக, பட்டவர்த்தனமாக பாதுக்காப்பு விதிகளை புறந்தள்ளியது.
 2. இரண்டாம் காரணம், தீ விபத்துக்கான காரணிகள் பற்றிய போதிய அறிவு இல்லாதது.
 3. மூன்றாம் காரணம், வருமுன் காப்பது என்ற அடிப்படை செயல்பாடுகள் பற்றி விபரம் அறியாதது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் தீ விபத்து பற்றிய வகைப்படுத்தலை செய்துள்ளது,

தீ விபத்தானது, நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது,

 1. வானவேடிக்கை மற்றும் வெடி பொருட்கள் மூலம் ஏற்படும் தீ விபத்து
 2. மின்சார இயந்திரத்தின் ஷார்ட்சர்க்யூட் மூலம் ஏற்படும் தீ விபத்து
 3. சமையல் எரிவாயு / சமை அடுப்பு வெடிப்பதன் மூலம் ஏற்படும் தீவிபத்து
 4. பிற தீ விபத்துகள்

மேலே கூறப்பட்டவை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்ட காரணிகள்.

கீழ்க்காணும் விளக்கப்படமானது கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அவற்றில் குறிப்பாக மின்சார ஷார்ட்சர்க்யூட் மூலம் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய அனலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.

Stat on Fire Accidents 1

கடந்த  2012 முதல் 2015 வரையிலான ஏற்பட்ட மொத்த தீ விபத்துகளில் மின்சார ஷார்ட்சர்க்யூட் மூலம் ஏற்பட்ட தீ-விபத்துகள் சுமார் 6 முதல் 13% சதவிகிதம் வரை. மேலும் 2012 க்கும் 2015 க்கும் ஒப்பீடு செய்து பார்த்தால் ஷார்ட் சர்க்யூட் மூலம் ஏற்பட்ட தீ விபத்துகள் அதிகரித்து வந்த வண்ணம் தான் உள்ளன.  குறிப்பாக 2015 ஆம் ஆண்டு புள்ளி விபரத்தினை எடுத்து கொண்டால் முந்தைய வருடத்தை விட 29% சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மேலும் இந்த ஆய்விற்காக மாநிலம் வாரியான தீ விபத்து பற்றிய விபரத்தினை ஆய்வு செய்யும் போது மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன, தமிழகம் மின்கசிவு மற்றும் ஷார்ட் சர்க்யூட் மூலமான தீ விபத்துக்களில் தேசிய அளவில் இரண்டாமிடத்தில் உள்ளது, மொத்த விபத்தில் 11% சதவிகிதம் மின் தீவிபத்து தமிழகத்தில் நடப்பதை நாம் அறிய முடிந்தது.State wise accidents

இந்த தீ விபத்து மூலம் குறிப்பாக மின்கசிவு மற்றும் ஷார்ட் சர்க்யூட் மூலம் ஏற்படும் பொருளாதார நஷ்டங்கள் என்று தமிழக அரசின் தீ விபத்து மற்றும் மீட்பு சேவை துறை தனது அறிக்கையில் தோராயமாக ரூபாய் 27 கோடி முதல் 52 கோடி வரை என்று அறிவித்துள்ளது. இந்த அறிக்கையானது நேரடியான இழப்பீடுகளை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது, ஒரு நிறுவனத்திற்கு தீ விபத்தின் மூலம் மறைமுக இழப்பு அளவிடமுடியாதது.

மேலும் கீழ்காணும் விளக்கப்படத்தில் மாவட்டம் வாரியாக கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அதன் விபரத்தை தந்துள்ளேன், குறிப்பாக தொழில் நகரங்களில் அதாவது கோவை, ஈரோடு, திருப்பூர் நகரங்களில் ஏற்பட்ட தீ அழைப்பு புள்ளி விபரங்களை காணலாம். குறிப்பிடத்தகுந்த அளவில் தீ அழைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.2016 State Statistics

மின் கசிவு மற்றும் ஷார்ட் சர்க்யூட் மூலம் ஏற்படும் தீ விபத்து பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாக நான் கருதுகிறேன். குறிப்பாக தொழில் நிறுவனங்களில் முதலீடுகளில் அதிகம் சமரசத்திற்குள்ளாவது மின்சார பாதுகாப்பு காரணிகள் மற்றும் உபகரணங்கள்.

அது மட்டுமின்றி மின்சார தீ விபத்து என்பது “மின்கசிவு அல்லது ஷார்ட் சர்க்யூட்” எனும் ஒற்றை காரணி கொண்டு வகைப்படுத்திவிட முடியாது. மின்சார விபத்துகள் பெரும்பாலும் திடிரென்று உருவாகுவதில்லை, மின்சாரத்தின் பல்வேறு காரணிகள் மூலம் பல்வேறு சமயங்களில் ஏற்பட்ட கூறுகளில் விளைவே திடிரென்று ஏற்படும் தீ விபத்து. இதனை மின்சார பொறியாளர்கள் நன்கு அறிவர். ஒவ்வொரு மின் இயந்திரத்தின் அல்லது நிறுவனத்தின் மின்பகிர்மான மற்றும் பயன்பாட்டு இயந்திரங்களில் மின்சாரத்தின் பல்வேறு விபரங்களை நாம் ஆய்வு செய்தல் அவசியம் ஆகிறது.

எங்களது நிறுவனம் தோராயமாக 86+ எனர்ஜி ஆடிட்கள் செய்துள்ளது, அவற்றில் 90% க்கும் அதிகமான நிறுவனங்களில் “மின்கசிவு மற்றும் ஷார்ட் சர்க்யூட்” வகையிலான தீ விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருந்ததை நாங்கள் அறிந்திருக்கிறோம். அதனை கண்டறிந்து தீர்வும் தந்திருக்கிறோம்.

மின்சாதனங்களில் கண்ணுக்கு தெரியாத வகையில் பல்வேறு மின் பயன்பாட்டு குறியீடுகள் மூலம் மட்டுமே அறியக்கூடிய விஷயங்கள் உண்டு, குறிப்பாக மின் அழுத்தம், மின் பயன்பாட்டில் வேறுபாடு, மின்கசிவு, மின்அழுத்தத்தில் வேறுபாடு, ஆகியவை சில.  இவற்றினை தகுந்த எலக்ட்ரிகல் ஆடிட் மூலம் கண்டறிந்து பெரும்பான்மையான விபத்துக்கள் வருமுன் நாம் காக்க முடியும். கண்ணுக்கு தெரியாத பல மின் பிரச்சினைகளை எங்களது வருமுன் காக்கும் செயல்பாடுகள் மூலம் அறிந்து தீ விபத்துகளை தவிர்க்க இயலும்.

(Electrical Installations often fail or malfunction because of Load Variation, Electrical Surge or inappropriate operational practices and Poor knowledge on Best Practices. The Electrical Panels and the Electrical Systems in the Infrastructure needs to be analyzed for its effectiveness in terms of Load Balance, Energy Loss. Unbalanced loads in the Phases will trigger excessive heat in the Systems, with the prolonged condition this might trigger the Hot Spot Formation and finally leads to Fire Hazard. The cables / wire laid under the trench or the wall have to be checked for its proper Size and functionality. The below image shows the Various Safety Issues in Electrical Panels identified in our Safety Assessment Program.Thermal Image

Many such issues in the Electrical systems won’t be visible to our naked eyes, To identify the “Fire Hazard” Locations and preventing the Failure in industries can be addressed by adopting our Customized “Electrical Safety Assessment & Audit Program using Thermographic Analysis”.

எங்களது “Electrical Safety Assessment & Audit Program” மூலம் உங்கள் நிறுவனத்தின் மின் சாதனங்களை மற்றும் மின் பயன்பாட்டினை ஆய்வு செய்து அவற்றில் உள்ள குறைகளை களைதல் மற்றும் அதன் மூலம் ஆற்றல் சேமிப்பு மற்றும் விபத்து தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் செய்யலாம். இந்த ஆய்வானது எல்லா நிறுவனங்கள், சோலார் மற்றும் காற்றாலைகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றிலும் செய்ய இயலும்.

வருமுன் காப்பதே சிறந்த முயற்சி.

இது பற்றி மேலும் அதிக தகவல்கள் தேவை எனில் நீங்கள் இங்கே உங்கள் விபரங்களை தந்து எங்களை தொடர்பு கொள்ளலாம் <Click Here>


References:

 1. http://www.tnfrs.tn.nic.in/statistics.htm
 2. http://www.tnfrs.tn.nic.in/Stat_16.pdf
 3. http://ncrb.nic.in/index.htm
 4. http://ncrb.nic.in/StatPublications/ADSI/ADSI2013/ADSI-2013.pdf
 5. http://ncrb.nic.in/StatPublications/ADSI/ADSI2015/adsi-2015-full-report.pdfLatest Email Banner 29052017

Thanks & Regards

Raman Azhahia Manavalan

%d bloggers like this: