Month: August 2017

மின்கசிவு மற்றும் ஷார்ட்சர்க்யூட் தீ விபத்துக்கள் ஒரு அலசல்.

மின்சார ஷார்ட்சர்க்யூட் மூலம் ஏற்படும் தீ விபத்துகள் குறித்தும் அதனை தொழில்துறையினர் எவ்விதம் வருமுன் காப்பது என்பது குறித்த கட்டுரை. தீ நாம் சந்திக்கும் விபத்துக்காரணிகளில் மிகப்பழமையானதும் அதிகம் காரணம் அறியப்படாத ஒன்றும் ஆகும். இன்றும் தீ விபத்துக்கள் மூலம் உயிர், உடமை மற்றும் பொருள் சேதாரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களில், தொழில்கூடங்களில், வணிகவளாகங்களில், மருத்துவமனைகளில், கூட்டம் அதிகள் சேரும் இடங்கள் என பல்வேறு இடங்களில் கோர தீவிபத்துக்களை கண்டிருக்கிறோம். இந்த தீ விபத்துக்களின் மூல காரணம் என்ன? தீவிபத்தினை தடுக்க நாம் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்விகள் ஏன் மனதில் எழுந்ததன் பதில் தான் இந்த கட்டுரை.