சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆற்றல் சேமிப்பு மீதான தமிழக அரசின் மானியம் பற்றிய அரசாணை

தொழில்துறையினர்களுக்கு வணக்கம்!!!

சமீபத்தில், நமது தமிழக அரசு, சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறியவும், ஆற்றலை சேமிக்கும் வழிமுறைகளை பெறவும் அவர்களை ஆற்றல் சேமிப்பு மீதான அவசியத்தை அறிவுறுத்தி நிறுவனங்களை ஆற்றல் சேமிப்பில் ஈடுபடுத்தும் விதமாக நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவது குறித்து ஓர் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரையில் அந்த அரசாணை பற்றியும், அதனை நிறுவனங்கள் எவ்விதம் பயன்படுத்தி பலன் பெறலாம் என்பது குறித்தும் கருத்து பகிர்ந்திருக்கிறேன்.

அரசாணை விபரம்:  / PEACE Scheme Detail: சிறுகுறு மற்றும்பி நடுத்தர நிறுவனங்களுக்கான பிரத்யேகமான திட்டம் இது. நிறுவனங்களில்  ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  1. எவ்வகையான நிறுவனங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்? சிறுகுறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் பயன்பெறலாம். இந்த திட்டத்தில் நிறுவனங்கள் தாங்கள் செய்யும் எனெர்ஜி ஆடிட் செலவினை அரசிடமிருந்து Subsidy யாக பெற்றுக்கொள்ளலாம். திட்டத்தினை பற்றிய சிறு விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 60 நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். விரைவில் பதிவு செய்யுங்கள், பயன்பெறுங்கள்.

GO Updated

நிறுவனங்கள் செய்யவேண்டியது, மாவட்ட தொழில்மையத்தினை தொடர்பு கொண்டு எனர்ஜி ஆடிட் செய்வதற்கான விருப்பத்தினை பதிவு செய்து கொள்ளவேண்டும். ஆடிட் செய்ய விருப்பம் இருப்பின் இங்கே கிளிக் செய்து உங்கள் விருப்பத்தினை பதிவு செய்யுங்கள் (இந்த தகவல் மாவட்ட தொழில்மையத்துடன் பகிரப்படும் – திருப்பூர்)

உங்களது விபரம், மாவட்ட தொழில்மையத்துடன் பகிரப்பட்டு, தொழில்மையத்தின் அறிவுரையின் பேரில் ஆடிட் செய்வதற்கான ஏற்பாடுகள் எங்கள் நிறுவனத்தின் மூலம் செய்யப்படும்.  இந்த திட்டத்தில் அறுபது நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற முடியும் என்பதால், விரைந்து பதிவு செய்து உங்களது விருப்பத்தினை தெரிவியுங்கள்.

இந்த மானிய திட்டம் பற்றி மேலதிக விபரங்கள் பெற எங்களை 09965555774 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் SIDBI வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால் உங்களது SIDBI கிளையினை தொடர்பு கொண்டு இது பற்றிய விபரங்களையும் பெறலாம்.

நிறுவனங்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தொழில்துறை சார்ந்த சங்கங்கள் இந்த திட்டத்தினை தத்தமது உறுப்பினர்களுக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: ஏற்றுமதியாளர்களுக்கு, இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும், பல பையர்கள் நிறுவனங்களை எனர்ஜி, வாட்டர் ஆடிட் செய்து அதன் மூலம் தங்களது கம்ப்ளையன்ஸ் முறைகளை செயல்படுத்த அறிவுறுத்துகிறார்கள், இந்த திட்டம் மூலம் உங்களது ஆடிட் செலவில் பாதி குறைவது மட்டுமில்லாது அனுபவம் வாய்ந்த ஆடிட்டர்கள் உங்களை பல்வேறு ஆற்றல் மேம்பாடு பற்றிய ஆலோசனைகளையும் தருவதால், உடன் இணைந்து பயன்பெறுங்கள்.


Latest Email Banner 29052017 

var aax_size=’728×90′;
var aax_pubname = ‘wwwvirtualvas-21′;
var aax_src=’302’;

http://c.amazon-adsystem.com/aax2/assoc.js

Raman Azhahia Manavalan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: