The Ministry of Power & Textile Ministry jointly launched an Initiative to promote Sustainable and Accelerated Adoption of efficient Textile technologies to Help small Industries – SAATHI, to assist Small Power loom Owners to Upgrade their Looms with the New Energy Saving Equipment, No upfront cost for the Equipment to be paid, the Payment for the investments can be repaid in 4-5 Years term through installment.
Contact Your Local Textile Commissioner Office for more details.
—-
ஜவுளித்தொழில் சந்தித்து வருகின்ற சவாலான கால கட்டத்தில் விசைத்தறி தொழில்முனைவோர்களுக்கு ஒரு ஆறுதல் தரக்கூடிய ஒரு அறிக்கையை மத்திய பாஜக அரசாங்கம் வெளியிட்டு உள்ளது.
எரிசக்தி துறை அமைச்சகமும் ஜவுளித்துறை அமைச்சகமும் இணைந்து புதியதோர் திட்டமாக – சிறு ஜவுளி தொழில்துரையினர்களுக்கு பயன்படும் வகையில் SAATHI (Sustainable and Accelerated Adoption of efficient Textile technologies to Help small Industries) எனப்படுகிற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் பிரத்யேக நிறுவனமான EESL மற்றும் அகில இந்திய அளவில் ஜவுளி இயக்குனர் துறை மூலம் மின்சார சிக்கனம் தரக்கூடிய விசைத்தறிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்படும், இதற்கான எந்தவித முன்பணமும் விசைத்தறி உரிமையாளர்கள் தரத்தேவையில்லை. இதனை முதல்கட்டமாக ஈரோடு, சூரத், மற்றும் இக்சால்கரன்ஜி ஆகிய இடங்களில் செயல்படுத்த அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
இந்த உபகரணங்களை பயன்படுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது செலவினங்களை குறைத்து இந்த உபகரணத்திற்கான பணத்தினை தவணை முறையில் 4-5 வருடங்களில் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
EESL எனப்படுகிற மின்திறன் சேவை நிறுவனம், கூட்டு பரிவர்த்தனை, மற்றும் கூட்டு பேரம் மற்றும் பொருட்கள் வாங்குதல் போன்ற செயல்கள் மூலம் கண்டறியப்பட்ட ஆற்றல் சேமிப்பு உபகரணங்கள் மற்றும் பொருட்களை உற்பத்தி நிறுவனங்களுக்கும் அரசிற்கும் மிக குறைந்த விலையில் பொதுவான அதிக அளவில் பெற்றுத்தரும் செயல்களில் ஈடுபட்டுள்ளது.
இது போன்ற நிறுவனங்கள் சேவை நிச்சயம் அங்கீகரிக்கப்பட வேண்டும், தொழில்துறையினர் இந்த திட்டங்களில் இணைந்து பயன்பெறுதலே சிறந்த அங்கீகாரமாகும்.
Contact Your Local Textile Commissioner Office for more details.
குறிப்பு:
இந்தியாவில் விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் 57% மேலானவர்கள் சிறு மற்றும் குறு நிறுவனங்களாவர். அகில இந்திய அளவில் சுமார் 24.86 லட்சம் விசைத்தறி நிறுவனங்கள் உள்ளன.
The Source Article