நிறுவனங்களின் கடன் தேவை – கடன் பெற இடைவெளியினை குறைத்திட மத்திய அரசின் நடப்பில் இருக்கும் பல்வேறு திட்டங்கள்

நண்பர்களுக்கு வணக்கம்.

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் மிகப்பெரும் சவாலாக இருப்பது சரியான நேரத்தில் நிதியுதவி பெறுவது.

இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தொழில் முனைவோர்களுக்கு 28 இலட்சம் கோடி ரூபாய்கள் கடன் தேவை இருப்பதாகவும், 10 இலட்சம் கோடி ரூபாய் கடன் தேவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் MSMEs க்களில் கடன் இடைவெளி அதாவது கிரெடிட் கேப் 56% விழுக்காடாக இருப்பதை அறிய முடிகிறது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த தருவாயில், ஒரு அறிக்கை தென் கொரியாவினை பற்றி இவ்வாறாக கூறுகிறது,

“தென்கொரியா விவசாய தொழில் நாடு, பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தற்சார்பு கொள்ளும் தன்மையற்ற வெளிநாட்டின் உதவிகளை எதிர்பார்க்கிற ஒரு நாடு” கொரிய பிரிவினையும் அது சார்ந்த அரசியல் பொருளாதார சவால்களும் அனைவரும் அறிந்ததே, இன்று அதே கொரியா வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவும் தற்சார்பு கொண்ட வாய்ப்புகளை தன்னகத்தே கொண்டு வளர்ந்த ஒரு நாடாக மாறியிருக்கிறது? இது எவ்விதம் சாத்தியமாயிற்று?

அமெரிக்கா தென் கொரியாவினை தனது ராணுவ தளமாக பயன்படுத்துவதால் மட்டுமே இத்துனை வளர்ச்சியினை எட்டிவிட முடியுமா? இந்த கேள்விக்கான நேரடி பதில் இந்த கட்டுரையில் இறுதியில் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

கொரிய தொழில்துறையானது “சேபோல்” என்றழைப்படுகிற ஒரு குடும்பம் அல்லது ஒரு நிறுவனம் கொண்டு நடத்தப்படுகிற பெரிய தொழில்களின் கூட்டமைப்புகள்தான் அங்கே அதிகம், உதாரணம் “ஹூண்டேய்”. ஆனால் கொரியாவில் பிரமிக்கத்தக்க அளவில் “30 இலட்சம்” க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள். தோராயமாக அந்நாட்டின் 99% நிறுவனங்கள் இந்த வரையறைக்குள் வருகின்றன. அந்நாட்டின் 80% க்கும் அதிகமான பணியாளர்களுக்கு இவ்வகை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே வேலை வாய்ப்பினை வழங்குகின்றன.

இந்த பெரியதொரு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கட்டமைப்பிற்கு அடித்தளமாக அமைந்தது 1976 களில் தென் கொரிய அரசாங்கம், கொரிய உத்திரவாத திட்டம் எனும் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது, – Korea Guarantee Scheme (KODIT) இந்ததிட்டத்தின் மூலம் கடன் வசதி உத்திரவாதத்தினை அந்த நாட்டின் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கியது, அந்த திட்டம் இல்லாவிடில் அந்நிறுவனங்களுக்கான நிதித்தேவைகளை பூர்த்தி செய்யப்படாமல் போயிருக்கும், இன்று அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% இவ்வகை நிறுவனங்களே. Korea Guarantee Scheme (KODIT) இன்றைய  அளவிலே உலகளாவிய அளவில் அதிகமான கடன்உத்திரவாத திட்டம் போர்ட்ஃபோலியோ வைத்திருப்பது தென்கொரியாதான். (Around $44 billion). உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகள் இந்த செயல்திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன. இந்த கொரிய உத்திரவாத திட்டம் இன்று பல்வேறு நாடுகளுக்கு உதாரணமான செயல்திட்டமாக கடன் இடைவெளியினை குறைத்திடவும் உள்நாட்டு உற்பத்தியில் கணிசமாக சிறுநிறுவனங்கள் திறம்பட பங்கெடுக்கவும் வாய்ப்பினை ஏற்படுத்தும் செயல்திட்டமாக பார்க்கப்படுகிறது.

உலகளாவிய அளவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை 3.5-4.5 கோடி, அவற்றில் தோராயமாக 2.5 கோடி நிறுவனங்கள் வளரும் நாடுகளில் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைசாரா நிறுவனங்களின் கடன் இடைவெளி தோராயமாக 40-50% நிறுவனங்கள் இன்னமும் நிதி தேவைகளில் கீழ் கொண்டுவரப்படாமல் உள்ளது அறிய முடிகிறது.                                    Credit Gap
முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களிலேயே தற்போதைய நிதி கடன் இடைவெளி 13 லட்சம் கோடி இருப்பதாக ஐஎப்சி யின் அறிக்கை கூறுகிறது.
Credit Gap Formal SME
முறைப்படுத்தப்பட்ட வங்கிக்கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்களிலேயே இந்த இடைவெளி இருக்கிறது என்பது வங்கிகளுக்கும், நிறுவனங்களுக்கும் இடையேயான இடைவெளியினை பட்டவர்த்தனமாக காண்பிக்கிறது.
 இந்தியாவில், கடன் உத்திரவாத திட்டம் ஒரு புறம் இருந்தாலும், எளிதில் கடன் பெறுதல் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அல்லது புதிய தொழில் முனைவோர்கள் எளிதில் கடன் பெரும் வண்ணம் வங்கித்துறையில்  மாற்றம் வர வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.
நிறுவனங்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது – நிதித்தேவைகளுக்கு வங்கியினை அணுகுவது. இதனை நிவர்த்தி செய்வது தேசத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்பில் பெரும்பங்காற்றும் என்பது மறுப்பதற்கில்லை. இந்தியாவில் திருப்தியான வங்கிப்பரிவர்த்தனை என்பது வங்கிக்கும் – அதாவது மேலாளருக்கும் வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கும் இடையேயான நல்ல உறவின் அடிப்படையில் இருப்பதாகவே இருக்கிறது.  சில ஆய்வறிக்கைகள், இந்த நல்லுறவு வங்கியின் பிரத்யேக சேவைகளை பெறுவதற்கான சாவியாகவும் இருப்பதாக கூறுகிறது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகளுடனான பரிவர்த்தனைகளை தாண்டி, அடுத்த கட்ட சேவைகளை தர வேண்டிய கட்டாயத்தில் வங்கிகள் இருக்கின்றன என்பது தான் எனது கருத்து.
தமிழகத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் பல்வேறு வகையில் தமிழக அரசால் அளிக்கப்பட்டு வருகின்றன, கடந்த 2000 ஆம்  ஆண்டில் இருந்து தமிழக தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் சுமார் 1,00,000 நபர்கள் தொழில்முனைவோர் பயிற்சி பெற்று அந்த திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் பெற்று பயனடைகின்றனர். இவர்களில்,
  • எத்தனை பேர் வங்கிக்கடனை முழுமையாக செலுத்துகிறார்கள்?
  • அவர்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட பயிற்சிகளோ அல்லது தேவை ஏற்படின் அவர்களை நெறிப்படுத்துவதற்கு யார் அவர்களுக்கு துணை செய்வார்கள்?
  • அவர்கள் வங்கியில் சமர்ப்பிக்கும் கடன் திட்ட அறிக்கையினை யார் அவர்களுக்கு தயாரித்து தருவார்கள்?
  • தொழில் தொடங்குவது மட்டுமின்றி இன்னோவேஷன் எனப்படுகிற புதியதொரு தொழில் முயற்சிகள் அந்த அளவில் ஊக்குவிக்கப்படுகிறது?
  • இது நாள் வரையில் மாவட்ட தொழில் மையங்களில் அளிக்கப்பட்ட தொழில் முனைவோர்களில் எத்துனை நபர்கள் வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக இருக்கிறார்கள்?

இது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. தொழில்துறைக்கும், தொழில்முனைவோர்க்கும் சாதகமான நிதிசூழல் மற்றும் அவர்களுக்கான முன்னேற்றத்திற்கும் அவர்களுக்கு தேவைப்படும் சேவைகளை திறம்பட தர வல்ல வல்லுனர்கள் மற்றும் அறிவுசார் தகவல்களை அவர்கள் பெறும்பொருட்டு தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தகுந்த தளத்தினை ஏற்படுத்தவேண்டும்.

இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டும், புதிய தொழில் தொடங்குவோர்க்கும், தொழில் செய்துகொண்டிருப்போர்க்கும் வாங்கிக்கடன்  பெறுதலுக்கான இடைவெளியினை குறைக்கும் வகையில் ஒரு புதியதொரு முயற்சியாக சிட்பி வங்கியின் கீழ்க்காணும் புதிய முயற்சிகள் தொழில்துறையினருக்கு, தொழில்முனைவோர்களுக்கு பலனளிக்கும் வகையில் செயல்படுத்தபட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கு சரியான தொலைநோக்கு செயல்திட்டம் மூலம் எப்படி கொரியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட கொரிய உத்திரவாத திட்டம் செயலாற்றியதோ அதே போல இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிட்பி வங்கியானது, தன்னை புதிய தலைமுறை தொழில் சூழலுக்கேற்ப மாற்றத்திற்கு உட்படுத்தும் வகையில் தனது புதிய லோகோவினை அறிமுகப்படுத்தியுள்ளது.

SIDBI

சிட்பி யின் இந்த லோகோ மாற்றம், அவர்களது நேரடி கடன் சேவை மற்றும் மீள்-கடன் சேவைகள் போன்ற திட்டங்கள் தாண்டி பல்வேறு கடன் திட்டங்கள், பல்வேறு சேவைகளை தருவதற்கான செயல்திட்டங்களில் ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

சிட்பி வங்கியின் ஏழு செயல்திட்டங்கள் அவற்றினை கீழே ஒவ்வொன்றினைபற்றியும் சிறு குறிப்போடு அதன் இணையதளத்தின் சுட்டியோடு தந்துள்ளேன்.

smallb1
https://smallb.sidbi.in/

“SmallB” – சிட்பி வங்கியின் பிரத்யேகமான ஒரு இணையதளம் சிறு தொழில் நிறுவனங்களுக்கான அறிவுசார் கருத்துக்களின் பெட்டகம். புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் ஆரம்பத்தில் இருந்து செய்யவேண்டிய செயல்களுக்கான “கையேடு”.

mudranமுத்ரா திட்டமானது குறு மற்றும் சிறு தொழில்களுக்கான சிறிய கடன் தரக்கூடிய திட்டம். இந்தியாவில்பெருநிறுவனமில்லா  சிறிய தொழில் துறைகள், சிறு வணிகர்கள், பழக்கடைகள், காய்கறி விற்பனை, மோட்டார் வாகன சேவைகள், உணவகம், பழுதுநீக்கும் சேவை கடைகள், கைவினைஞர்கள், உணவு தயார் செய்யபவர்கள், தெரு வணிகர்கள் என பல்வேறு தோராயமாக 50 கோடிமக்களுக்கு தொழில் வாய்ப்புகள் அளிக்ககூடிய துறை.  இவர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஏற்படுத்தப்பட்ட திட்டம் தான் முத்ரா. சிறு தொழில்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அவைகள் ஏற்படுத்தும் பொருளாதார மற்றும் தொழில் ஆதாயங்கள் அளவில் பெரியது. தேசிய புள்ளியியல் சர்வேயின் 2013 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி இந்தியாவில் 5.14  கோடி சிறு வணிகங்கள் நிதி தேவை வரையறைக்குள் இருப்பதாக அறியப்படுகிறது. இந்நிறுவனங்களின் மொத்த வர்த்தக மதிப்பு ஆண்டுக்கு 6.28 லட்சம் கோடி ரூபாய்கள். இந்நிறுவனங்கள் தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக்கிய பங்கு வகிப்பதையும் மறுக்க இயலாது.  இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், கடன் தேவைக்கான இடைவெளியினை குறைத்திடவும் முத்ரா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் முத்ரா திட்டத்தின் மூலம்  1.8 Lakhs Crore கடன் அளிக்கப்பட்டுள்ளது.

startupmitra_enசிட்பி ஸ்டார்ட்அப் மித்ரா – புதிதாக தொழில் தொடங்கும் நபர்களுக்கு, அவர்களது தொழில் முதலீடுகளை எங்கே எப்படி பெறலாம் என்பது பற்றியும் இன்குபேஷன் எனப்படுகிற தொழில் முனைவோருக்கான பயிற்சிகள், முதலீட்டாளர்கள், அளிக்கக்கூடிய விபரங்கள், அவர்களது உதவிகள், உங்களது தொழில் ஐடியாவினை அடுத்த கட்டத்திற்கான நகர்வினை சரியான வழிகாட்டுதலுடன் செய்திட சிட்பியின் ஸ்டார்ட்அப் மித்ரா உதவுகிறது.

suinஸ்டாண்ட்அப் இந்தியா – Standup India – இந்த திட்டமானது SC-ST சமூகத்தினை சார்ந்த தொழில்முனைவோர்களுக்கு நிதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 10 Lakhs- 1Crore வரை வங்கிக்கடன் பெறுவதற்கு வழிவகை செய்கிறது.

slide_08_12_2017

ஓராண்டு முடிவடைந்த நிலையில் ஸ்டாண்ட்அப் இந்தியா திட்டம் மூலம் 32,704 பயனாளிகளுக்கு 5405 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.  எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லாமல் பழங்குடியினர் மற்றும், பட்டியலின சமூகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்கள் கடன் வசதி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

.fundofdund1

வென்ச்சர் நிதி எனப்படுகிற தனியார் பங்கு நிதி சேவை. இது சிட்பியின் பிரத்யேக வென்ச்சர் நிதி, இலாபகரமான புதிய சிறந்த பிராஜக்ட் திட்டங்களுக்கு இந்த நிதி மூலம் முதலீடுகளை வழங்குகிறது சிட்பி.

GSTதேசம் முழுமைக்கும் ஒரே வரி என்பதாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள “பொருள் சேவை வரி” என்பது குறித்த பல்வேறு சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அவர்களது வரி செலுத்துதல் மற்றும் அதற்கான வரி விபரங்கள் பெறுவதற்கான “ஜிஎஸ்டி” சேவை மையமாக இணைய தளத்தை உருவாக்கியுள்ளது.

udyamimitra1

சிட்பியின் முத்தாய்ப்பான ஒரு செயல்திட்டம் தான் உத்யாமி மித்ரா – தொழில்துறை நண்பன் என்று அர்த்தம் தருகிற தொழில் புரிபவர்களுக்கான அனைத்து சேவை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு இணைய வசதி. இதன் மூலம் வங்கிக்கடன் வேண்டுவோர் அவர்களுக்கென்று பிரத்யேகமான இணைய கணக்கு மூலம் அவர்கள் விபரம், மற்றும் கடன் தேவைகளை பதிவு செய்து கடன் தரக்கூடிய வங்கிகளோடு நேரடியாக இணைந்து கோள்ளலாம்.  இந்தியா முழுவதிலும் எந்த நிறுவனமும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் இணைய தளம் மூலம் அணுகலாம்.இந்த தளம் மூலம்,

Udyami Mitra Registration

  • வியாபார நுணுக்கங்கள் மற்றும் அறிவுசார் தகவல்கள் பெறலாம்.
  •  1.25 லட்சம் வங்கிகிளைகள் மற்றும் 17,000 க்கும் மேலான தொழில் வழிகாட்டும் ஆலோசகர்களை தொழில்முனைவோர்களுடன் இணைக்கிறது இந்த இணையதளம்.
  • தீர்வுகள் – சுய மதிப்பீடு பயிற்சிகள், தேவைப்படுகின்ற தொழில்நுட்ப மற்றும் ஸ்கில் சார்ந்த பயிற்சிகள் பெறுவதற்கான தகவல்கள் அதற்கான பயிற்சியாளர்கள் விபரங்கள் அனைத்துமே இந்த தளத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடன் பெறுவதற்கான விண்ணப்படிவம் பூர்த்தி செய்யும் சேவை, விபரமான திட்ட அறிக்கை தயார் செய்வது, கடன் பற்றிய ஆலோசனை, ஆற்றல் சேமிப்பு, நிதி நிர்வாகம் பற்றிய பயிற்சி, மானிய விபரம், திறன்மேம்பாடு, பணியிட தேவை தொழில்முனைவோர் பயிற்சி, போன்ற பல்வேறு தேவைகளை தாங்களே இணையத்தளத்தில் பதிவு செய்யும் போது தேர்ந்தெடுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

um

தமிழகத்தில் தோராயமாக 4000 க்கும் மேலான கடன் பயனாளிகள் இந்த இணையதளம் மூலமாக பயன்பெறுள்ளார்கள். திருப்பூரில் மட்டும் 36 கோடி ரூபாய் வங்கிகடன்  இந்த தளம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தளம் வங்கிகளுக்கும் தொழில்துறையினருக்கும் இடையேயான இடைவெளியினை குறைக்கும் பாலமாக இந்த தளம் இருக்கிறது.

தொழில்முனைவோர்கள், தொழில்துறையினர் இந்த கட்டுரையில் தரப்பட்டிருக்கும் பல்வேறு இணைய சேவைகளை பயன்படுத்தி பலன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது நிறுவனம் “VRNC” இந்த “தொழில்துறை நண்பன்” இணைய தளத்தில் ஓர் StandUp India Hand Holding Consultant (SUHC) ஆக இணைந்துள்ளோம். நீங்கள் இணையதளத்தில் உங்களது தேவைகளை பதிவு செய்யும் போது எங்களது சேவை தேவை ஏற்படின் நீங்கள் எங்களை இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

ஏதேனும் சந்தேகங்களோ அல்லது விளக்கங்களோ தேவைப்படின் +91-9965555774 எனும் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளவும். தொழில்துறையின் நன்மைக்காகவும், தொழில்முனைவோரினை கொண்டாடவும் முற்றிலும் இலவசமாக உங்களுடன் கருத்து பரிமாற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.

Raman Azhahia Manavaalan | VRNC |

Latest Email Banner 29052017

பார்வை:

1. US-based Entrepreneurial Finance Lab (EFL).

2. http://mckinseyonsociety.com/downloads/reports/Economic-Development/Two_trillion_and_counting.pdf

3. “In India, 92 per cent of MSMEs lack access to formal sector finance,” said EFL’s Asia Head Emily Silberstein.

4. http://www.editn.in/app/webroot/img/EDI%20Annual%20Report-11.12.2016.%20addl.%20doc%20%281%29.pdf

5. http://blogs.worldbank.org/psd/learning-korea-story-korea-s-credit-guarantee-agency

6. SIDBI’s Various Reports and Presentations.

Raman Azhahia Manavalan

One thought on “நிறுவனங்களின் கடன் தேவை – கடன் பெற இடைவெளியினை குறைத்திட மத்திய அரசின் நடப்பில் இருக்கும் பல்வேறு திட்டங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: