உத்யோக் ஆதார் எண் – இணையதள குழப்பங்கள்

நண்பர்களுக்கு வணக்கம்.

சமீபத்தில் இரண்டு குறு நிறுவனங்கள் என்னிடம் அரசு சலுகைகள் பெறுவது தொடர்பாக சில சந்தேகங்களை கேட்டிருந்தனர், நானும் அவர்களை முதலில் இணையத்தின் மூலம் உத்யோக் ஆதார் பதிவு செய்ய வலியுறித்தி இருந்தேன். அவர்கள் என்னிடம், உத்யோக் ஆதார் பெறுவதற்கு பணம் செலுத்தவேண்டுமா என்று கேட்டனர், அதற்கு நான் இது முற்றிலும் இலவச சேவை, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் மூலம் செயல்படும் ஒரு சேவை என்று விளக்கி கூறினேன். அவர்களோ, இல்லை சார், பணம் தந்தால் தான் சர்டிபிகேட் பிரின்ட் செய்யமுடியும் என்று கூறினார், எனக்கு ஆச்சர்யம் அளித்தது, பின் விரிவாக நேரம் கிடைத்தபோது இதன் மீது ஆய்வு செய்ததின் மூலம் இந்த விஷயம் எனக்கு புலப்பட்டது.

இணையத்தில் நாம் “Udyog Aadhaar” என்று சர்ச் செய்யும்போது, கீழ்கண்டவாறு நமக்கு சர்ச் ரிசல்ட்ஸ் வரும்,

.Jpeg

மேற்காணும் படத்தில் குறிப்பிட்டபடி நாம் இணைய தேடலின் போது முதலில் வரும் இணையதளம் அதிகாரப்பூர்வமான தளம் இல்லை. இதை நாம் போலி என்றறியவேண்டும். ஏனென்றால் “MSME Registration.org” என்று இருக்கிறது.

அதே தேடலின் ரிசல்ட்ஸ் பார்த்தால் இரண்டாம் இடத்தில் இருக்கும் அதிகாரப்பூர்வமான அரசின் இணைய தளத்தினை நாம் காணலாம். அது “udyogaadhaar.gov.in” என்று இருக்கும். இதுதான் அரசின் உத்யோக் ஆதார் பெறுவதற்கான இணைய தளம். இந்த தளத்தின் மூலம் நாம் எவ்வித கட்டணமும் இன்றி நாம் நமது நிறுவனத்திற்கான ஆதார் அங்கிகாரத்தினை பெறலாம்.

இது பற்றி மாவட்ட தொழில் மையத்தினை அணுகி தெரிவித்துள்ளோம், இருப்பினும் தொழில்துறையினர் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

இணையத்தில் நடக்கும் இது போன்ற மோசடிகளை அரசின் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.

போலி இணையப் பற்றிய விபரமான தகவல்கள்:

Fake UAM 1

Fake UAM 2

இதனை சரிபார்த்து, தகுந்த நடவடிக்கை எடுத்திட தொழில்துறையினரும், தொழில் சங்கங்களும் செயல்பட்டிட வேண்டுகிறேன்.

குறிப்பு: திருப்பூர் தொழில்பாதுகாப்பு குழு, திருப்பூர் டையர்ஸ் அசொசியேஷன், திருப்பூர் தொழில்துறையினருக்கு உத்யோக் ஆதார் இலவசமாகவே இணையம் மூலம் பெற்றுத்தர உதவிபுரிந்து வருகிறார்கள்.

திருப்பூர் தொழில்துறையினர் போலி இணையதளத்தின் மூலம் ஏமாறாமல் சங்கங்கள் மூலம் அணுகி பெற்றிட வேண்டும்.

Banner VRNC

Raman Azhahia Manavalan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: