தொழில்துறையினருக்கு வணக்கம்,
நமது தொழில்நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பு, உற்பத்தி திறன் மேம்பாடு, சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும் ஒரு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஐகேஎப் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வானது உலகவங்கி மற்றும் இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் “எரிசக்தி திறன் அமைப்புடன்” இணைந்து பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனம் நடத்துகின்ற ஒரு நிகழ்வாகும்.
இந்த நிகழ்வானது நமது திருப்பூர் கிளஸ்டரில் நடைபெற்றுவருகின்ற உலக வங்கி மற்றும் சிஐஐ உடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். நிகழ்வின் விபரங்கள் கீழே,
Venue: IKFA Hall, Tirupur Rd, Mahalakshmi Nagar, Avinashilingampalayam, Goundampalayam, Tamil Nadu 641664. Date: April 09, 2019, Tuesday. Time: 10:00 AM – 05:00 PM
இந்த கண்காட்சியில் எரிசக்தி சேமிப்பு, நீர்மேலாண்மை, உற்பத்தித்திறன் மேம்பாடு சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தினை கண்காட்சிக்கு வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது தொழில்நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தினை பற்றி அறிந்து அதனை நமது நிறுவனங்களில் செயல்படுத்த எதுவாக இருக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.
Register Your Participation <Click Here>
We are attaching the tentative programme schedule for your perusal and inputs.
Following are some of the key features and attractions of the exhibition:
35+ Technology Vendors, New Innovative Solutions for Energy Efficiency, Resource Efficiency and Cleaner Production.
இது போன்ற நிகழ்வுகள் நமது தொழில்துறையினர் சந்தித்து வரக்கூடிய ஆற்றல் சேமிப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு சவால்களுக்கு தீர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொள்ள முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.