அமேசான் டாட் காம்’ மின் ஜெப் பெசோ கூறும் தொழில்முனைவோருக்கான 20 கருத்துக்கள்

திரு. ஜெப் பெசோ – அமேசான் டாட் காம் எனும் இணைய வர்த்தக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, கடந்த வருடங்களில் இவர் கூறிய முதன்மையான இருபது கருத்துக்கள் இங்கே மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு நமது வாசகர்களுக்காக பகிரப்படுகிறது. ஒவ்வொரு கருத்துக்களும் நமக்கென பிரத்யேகமாக கூறப்பட்டவை போன்று தோன்றும், தொழில்முனைவோருக்கான பிரத்யேக அறிவுரைகளாக இதனை இங்கே பகிர்கிறேன்.

1.சிக்கலான சூழலில் அந்த சூழலில் இருந்து வெளியேறும் ஒரே ஒரு வழிமுறை நமக்கான வழியினை நாமே கண்டறிதல் தான்.

2. ஒரு நிறுவனத்தின் “பிராண்ட்” என்பது ஒரு நபரின் நன்மதிப்பு போன்றதாகும். நன்மதிப்பினை நாம் பெறுதல் சவால் மிகுந்த விஷயங்களை திறம்பட செய்வதன் மூலமே.

3. நமது நிறுவனங்கள் மாறும் கால சூழலுக்கேற்ப “இளமையாகவே” இருத்தல் அவசியம்.

4.நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள், சேவைகள் வாடிக்கையாளரை மையமாக கொண்டிருக்கவேண்டும்.

5. நீங்கள் விமர்சனம் செய்யப்படுவதை விரும்பாதபட்சத்தில், எதையும் புதுமை செய்ய முற்படாதீர்கள்”.

6. நீங்கள் புதுமை படைக்க விரும்புகிறீர்கள் என்றால், உங்களை பற்றிய மதிப்பீடுகள் தவறான புரிதலுக்குட்படும். அதற்கும் நீங்கள் தயாராக இருக்கவேண்டும்.

7. வாடிக்கையாளர்க்கு அளிக்கும் சிறந்த சேவை எதுவெனில், அந்த வாடிக்கையாளருக்கு சேவை குறித்து உங்களை தொடர்பு கொள்ளவோ,  பேசவேண்டிய தேவையில்லாமல் இருக்க வேண்டும். 

8. அமேசான் நிறுவனத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக  மூன்று பெரிய யோசனைகளை வெற்றியடைவதற்காக செயல்படுத்தி வந்துள்ளோம் அவை முறையே வாடிக்கையாளரை முன்னிலைப்படுத்துதல், புதியவைகைளை கண்டுபுடித்தல், மற்றும் பொறுமையாக காத்திருத்தல்.

9. புதிய கண்டுபிடிப்புகள் குறிப்பாக விருப்பமானவைகள் எப்பொழுதும் தற்செயலாக நடைபெறுபவை. 

10. ஒரு சோதனை இவ்வாறு தான் விளைவினை தரும் என்று நீங்கள் அறிந்தால் அது சோதனையே அல்ல.

11. ஆபத்தானதென்பது புதிய உருவாக்கங்கள் இல்லாமலிருப்பது.

12. கடினமாக உழையுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், வரலாற்றை படையுங்கள்.

13. “நான் இந்த பைத்தியக்காரத்தனத்தை செய்யப் போகிறேன். ஆன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தை நான் தொடங்கப் போகிறேன்.

14.  “தோல்வியுற்றால் நான் வருத்தப்பட மாட்டேன், ஆனால் நான் வருத்தப்படுவது ஒரு விஷயத்தை முயற்சிக்கவில்லை என்றால்.”

15. “தொழில் முனைவோர் யதார்த்தமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆகவே, வணிகத் திட்டத்தை எழுதும் போது அந்த முதல் நாளில் முழு விஷயமும் 70 சதவிகித தோல்வியடையும்  வாய்ப்பு உள்ளது என நீங்கள் நம்பினால், அது சுய சந்தேகத்தின் அழுத்தத்தை நீக்குகிறது. ”

16. உங்கள் போட்டியாளர்கள் உங்கள் மீது கவனம் வைக்கையில், நீங்கள் வாடிக்கையாளரிடம் கவனம் செலுத்துங்கள். ”

17. மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, அவர்கள் தங்களுக்கான ஆர்வத்தை கட்டாயத்துடன்  முயற்சிக்கிறார்கள். உங்கள் ஆர்வங்களை நீங்கள் தேர்வு செய்யவில்லை. உங்கள் உணர்வுகள் உங்களைத் தேர்ந்தெடுக்கின்றன. “

18. “நீங்கள் புதுமை செய்யப் போகிறீர்கள் என்றால் தவறாகப் புரிந்து கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.”

19. நாம் செய்ய வேண்டியது எப்போதும் எதிர்காலத்தை நோக்கிய பார்வைதான். உங்களைச் சுற்றியுள்ள உலகம் மாறும்போது, ​​அது உங்களுக்கு எதிராக மாறும்போது – சாதகமான காற்று வீசுவது நின்று பாதகமான காற்று வீசுகையில். நிதானமாக  என்ன செய்வது என்று கண்டுபிடிக்க வேண்டும், ஏனெனில் புகார் செய்வது ஒரு உத்தி அல்ல.

20. நீங்கள் பிடிவாதமாக இல்லாவிட்டால், நீங்கள் விரைவில் சோதனைகளை கைவிடுவீர்கள். நீங்கள் நெகிழ்வானவராக இல்லாவிட்டால், தீர்க்க முயற்சிக்கும் ஒரு பிரச்சினைக்கு தீர்வைக் காண மாட்டீர்கள்”.

 

 

Raman Azhahia Manavalan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: