நூறாண்டுகள் பழமையான தமிழகத்தின் நீர்சேமிப்பு வழிமுறைகள் இந்தியாவிற்கு தண்ணீர் சேமிப்புக்கு வழிகாட்டும்
தமிழகம் முதல், ராஜஸ்தான் வரை இந்த நாட்டின் பாரம்பரிய தண்ணீர் அமைப்புகள் நூறாண்டு கடந்தும் பயன்பாட்டில் இருக்கின்றன. தண்ணீருக்கான தேவை மற்றும் சிக்கல்கள் உருவாகும் போது நமது பாரம்பர்ய இயற்கை சார்ந்த வழிமுறைகளே பயனளிக்கின்றன. – திரு. சங்கேத் பாலே (திபிரின்ட் கட்டுரையில்)
இந்த கட்டுரையில் நொய்யலின் பாரம்பர்ய இயற்கை சார்ந்த கட்டமைப்புகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

பேரூர் பட்டீஷ்வரர் கோவில் கிடைத்த 13 ஆம் நூற்றாண்டினை சார்ந்த கருங்கல் சாசனம் நொய்யல் நதி நீர் பங்கீடு பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. 8ஆம் நூற்றாண்டு முதலே சோழர்களும் விவசாயிகளும், சிறந்த ஒன்றொடு ஒன்று தொடர்பு கொண்ட தடுப்பு அணைக்கட்டுகள், கால்வாய்கள் மற்றும் இயற்கையான. உருவாக்கப்பட்ட எரிகள் போன்றவற்றை அமைத்து நதி நீரை திறம்பட பயன்படுத்துவதை கைக்கொண்டிருந்தனர். மேற்சொன்ன அமைப்பானது நதியின் ஒட்டம் மற்றும் நிலத்தின் அம்சத்தினை பொறுத்து நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.
துரதிர்ஷ்ட வசமாக நமது பாரம்பர்ய நீர்நிலை அமைப்புகள் முறையான பயன்பாட்டிற்கு வழியில்லாமல் இப்பகுதியின் நகரமயமாக்கலில் சிக்குண்டது எனலாம்.
நமது பாரத தேசத்தில் இது போன்ற பல பாரம்பர்ய நீர்நிலை நிர்வாகத்தினை நாம் காணலாம். கிழக்கு கொல்கத்தாவின் சதுப்புநிலப்பரப்பு சுமாராக 12500 ஹெக்டேர், நகரத்தின் கழிவுநீரை சுத்திகரிக்கவும், சுமாராக 20000 குடும்பங்களுக்கு வாழ்வாதரத்தை அங்கே விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் மூலம் தருகிறது.
அஜான் குட்டை 17 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் மஹராஜ சூரஜ்மால் பராமரித்தது இயற்கையாய் அமைந்த தளம் அது, அங்கே இருக்கும் பரத்பூர் தேசிய பூங்கா இன்று யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய சின்னமாக உள்ளது.
தமிழகத்திலே ஏரிகளை அடிப்படையாய் கொண்ட விவசாயத்தின் பரப்பினை நாம் இன்றளவும் காணலாம். இவை அனைத்துமே நீர் வறண்ட காலங்களிலும் விவசாயம் செய்யும் வசதிற்கு உருவாக்கப்பட்டவை நூறாண்டுகள் முன்னமே.
நமது முன்னோர்கள் உருவாக்கிய குளங்களும், குட்டைகளும், ஏரிகளும், தடுப்பணைகளும், வாய்க்கால்களும் இன்று முன்னெப்போதுமில்லாத ஆபத்திற்கு உட்பட்டிருக்கிறது.
8-10 ஆம் நூற்றாண்டுகளில் நீர்த்தேவைகள் ஆறுகளை அடிப்படையாய் கொண்ட குளம், குட்டை, ஏரி, கண்மாய், மூலம் பெறப்பட்டது. ஆனால் தற்கால நமது அரசு நிர்வாகத்தின் இலக்கானது பிரிட்டிஷார் காட்டிய வழிமுறையை ஒற்ற மிகப்பெரிய கட்டுமானங்கள் அணைகள், தடுப்பணைகள், நதிநீர் இணைப்புகள் மீது இருப்பதால், நமது பாரம்பர்ய நீர்மேலாண்மை மூலம் நீர்த்தேவைகளுக்கு அங்கீகாரம் கிடக்காமல் போகின்றது. மக்கள் தொகை பெருக்கம், நகர்ப்புறமயாகுதல் பாரம்பர்ய நீர் மேலாண்மைக்கு சவாலாக இருந்தாலும், நீர்நிலைகள் உள்ளூர் தேவையை நீர் மட்டத்தினை உயரச்செய்யும் என்பது நிரூபணம்.
நமது நாட்டின் நிலத்தடி நீர் வற்றுவது மட்டும் இன்றி இருக்கின்ற நீர் நிலைகளும் அவற்றின் நீர்பிடிப்பு திறன் மற்றும் அவற்றினை மீளுருவாக்கும் திறனையும் இழந்து வருகின்றன. பாரம்பரிய நீர்நிலை தொகுப்புகள் நிர்வாகத்தின் அலட்சியம், அத்துமீறிய நில ஆக்கிரமிப்பு, மோசமான பராமரிப்பு, பெருகி வரும் நர்ப்புறமயமாக்கம் ஆகியவற்றால் பாதிப்படைந்துவருகின்றன.
மக்களின் செயல்திட்டம்:
நொய்யல் மற்றும் அதன் எரிகள் இன்றளவும் பயன்பாட்டில் இருப்பினும், அதிகரித்து வரும் நகர்ப்புறம், விவசாய மற்றும் தொழில்துறை மாசுபாடும் நொய்யலில் அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு ஆய்வுகள் நொய்யலின் பல்வேறு ஏரிகளில் கரைந்துள்ள உவர் தன்மையானது உல சுகாதார நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவுகளை காட்டிலும் அதிகமான அளவில் 8,000 ppm வரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இத்தனை மாசுபாடுகளுக்கு மத்தியிலும் நொய்யல் தனது நீர்வளத்தினை தொடர்ந்து அளித்துக்கொண்டேதான் இருக்கிறது. நொய்யலின் நீர் வளத்தொகுப்பில் 32 ஏரிகள் – அவை இந்த நிலப்பரப்பில் நிலத்தடி நீர்வளத்தை செரிவூட்டவும், வெள்ளசேதாரத்தை தடுக்கவும், மீன்வளம் செறிவோடும், விவசாய பயன்பாட்டிற்கும் பங்களிக்கின்றன. இந்த ஏரி நீர்தொகுப்பில் 3550 km2 விவசாய நிலங்களில் தென்னை, நெல், வாழை மேலும் பல பயிர்கள் பயிர்விக்கப்பட்டுவருகின்றன. விவசாயம் மட்டுமின்றி இந்நதி கோவை மற்றும் திருப்பூரின் நீராதாரத்திற்கும் அடிப்படையானதாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சீசன் தவறாது படையெடுக்கும் ஆயிரக்கான பறவைகளுக்கு சுமாராக 150 பறவையினங்களுக்கு புகலிடமாக இருப்பது இந்த நதியின் நீர்ச்சூழல் தான்.


பெரும்பாலான ஏரிகள் தன்னார்வலர்கள், குழுக்கள், அரசு சாரா அமைப்புகள் உள்ளூர் மக்களின் உதவியோடு குறிப்பாக சிறுதுளி, கியுப், கோவைகுளங்கள், வனத்துக்குள் திருப்பூர் போன்ற அமைப்புகள் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தகுந்த களப்பணிகள் மூலம் பெரும்பாலான நீர் நிலைகளை மீட்டெடுத்துள்ளன. தூர்வாறுதல் தொடங்கி, சீரமைப்பது, நீர் வரத்து பாதைகளை புனரமைப்பது, மழைக்காலங்களில் நீர் சேமிப்பை மேம்படுத்துதல் என பணிகள் பட்டியல் நீளும். அதுமட்டுமல்லாது அறிவியல்பூர்வமான சூழலியல் ஆய்வுகள், சுத்தப்படுத்தும் பணிகள், மரங்கள் நடுதல், போன்ற பல்வேறு பரிமாணங்களில் செயல்பாடுகள் களத்தில் நடைபெறுவதன் மூலம் அரசு அமைப்புகள், முனிசிபல் கார்ப்பொரேஷன், பப்ளிக் வொர்க்ஸ் டிபார்ட்மெண்ட், வன இலாகா மீன்வளத்துறை என்று பல்வேறு அரசு இலாகாகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டு நொய்யலின் தன்மையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு தமிழக அரசு ரூபாய் 230 கோடி நொய்யலை மீட்டெடுக்கும் பணிக்கு ஒதுக்கியுள்ளது. இந்த அறிவிப்பானது பல்வேறு சூழலியல் ஆர்வலர்களுக்கும் களப்பணியாளர்களுக்கும் நொய்யலை மீட்டெடுக்கும் பணியில் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருப்பினும், பலவலாக இந்த செயல்திட்டங்கள் நதியின் வாய்க்கால் துவாரங்கள், கரையோரங்கள் “கான்கிரீட்” தளங்களிடும் பணியாக போய்விடக்கூடாது என்பதும் கருத்தாக பகிரப்பட்டு வருகிறது. உள்ளூர் அரசு திட்டக்குழுவினர், மக்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்கள், தொழில்நுட்ப ஆலோசகர்கள், அரசுசரா அமைப்புகள், களப்பணியாளர்கள், ஆகியோரை உள்ளடக்கிய நிலைக்குழுவினை அமைத்து செயல்திட்டங்களை செயல்படுத்துதலில் மக்கள் பங்கினை உறுதிப்படுத்துதலும் முக்கியமாகிறது.

இயற்கை வழிமுறை சார்ந்த – பாரம்பர்ய நீர் மேலாண்மை செயல்பாடுகளை அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மூலம் நொய்யலை மீட்டெடுப்பதற்கான செயல்களில் ஈடுபடுத்துதல் நிலைத்த நீடித்த, குறைனவான செலவுகளில் நீர் மேலாண்மைக்கான வழிமுறையாகும். அதற்கு WWF India போன்ற தன்னார்வ அறிவியல் அமைப்புகள், களப்பணிகள் மூலமும் மக்களின் ஈடுபாட்டோடும் சாத்தியப்படுத்த இயலும்.
அரசு அமைப்புகள், மாவட்ட நிர்வாகம், தொழில்நிறுவனங்கள், மக்கள் குழுக்கள் இணைந்து பண்டைய நீர்மேலாண்மை செயல்பாடுகளை கண்டறிந்து செயல்படுத்துதல் அவசியமாகிறது.
மூலம்: This centuries-old system in Tamil Nadu can teach India how to save water again
ஆங்கில மூல கட்டுரையாளர்: சாங்கேத் பாலே – குழு தலைவர் WWF India’s Noyyal-Bhavani river basin conservation program. (Views are personal)
தமிழாக்கம்: இராமன் அழகிய மணவாளன் (CEO-VRNC)