தமிழர்கள் சந்தேகத்திற்கு பெயர் போனவர்கள்! நல்ல காரியமோ, கெட்ட காரியமோ, ஒரு விஷயத்தில் புதிய கோணத்தில் சிந்திப்பதாக நினைத்து இந்த சமுதாயத்தில் நடைபெறும் நல்ல பல விஷயங்களை விஷக்கண் கொண்டு பார்ப்பது சிலருக்கு வழக்கமாகி விட்டது. பொதுவாக நான் இது போன்ற துர் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்தே வருவேன், ஆனால் இன்று நான் இணையத்தில் முகப்புத்தகத்தில் கண்ட ஒரு பதிவு என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. படிப்பவர்களின் வசதிக்காக அந்த பதிவினை இங்கே ஸ்கிரீன் ஷாட் தந்துள்ளேன்.
ஸ்கிரீன்ஷாட்
வேலுமணி தூயவன் என்பவர் இட்டிருக்கும் பதிவு, அவரது சொந்தக்கருத்தினை பதிவு செய்ய அவருக்கு உரிமை உண்டு, ஆனால் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்வதன் மூலம் அவருக்கு என்ன இலாபம் என்பது எனக்கு தெரியவில்லை. பதிவுக்கு அவர் இட்டிருக்கும் தலைப்பு “நீளும் ஆக்டோபஸ் கரங்கள்”! அடேங்கப்பா என்ன ஒரு கற்பனை வளம்!!
மேலும் மாற்றம் அணியினரின் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரே தீர்மானிப்பவர்களாக செயல்பட்டனர் என்று கூறியிருக்கிறார், அடப்பாவமே! இது வேறையா?
குஜராத் முதல்வரும், “நிச்சய” பிரதமருமான மோடி ஆவர்களை தொழில்துறையினர் சந்தித்தது பல முதலீடுகளை குஜராத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்ற தலைவரை கண்டு அவரிடத்தில் நமது தொழில்துரையினறது கருத்துக்களை பகிர்தல் நிமித்தமாகவே இருக்கக்கூடும்.! மேலும் ஒரு முதலீட்டாளராக பார்த்தால் நாட்டின் சிறந்த முதல்வரை அணுகுதல் என்பது இயற்கையான ஒன்றே!
எட்டு கை கொண்ட ஆக்டபஸ், அருமையான உவமானம்! அனால் பாவம் உமது கருத்துக்கு தகுந்த ஆதாரம் சேர்க்க தவறிவிட்டீர்கள் என்றே நான் கருதுகிறேன். பெரியார், கருணா பாணி எழுத்துக்களை அதிகம் படித்தவர் போலும் நண்பர், அடித்து விட்டிருக்கிறார்! மாற்றுக்கருத்து பரப்புரை மூலம் கருத்துக்கள் பதிவிடுதல் நல்லதொரு விளம்பரத்திற்கு பயன்படும் அன்றி விவாதத்திற்கு அல்ல!!
ஸ்ரீபுரம் மற்றும் அதனை சார்ந்தவர்கள் எட்டு கைகள் மட்டுமல்ல, ஆயிரமாயிரம் ஜோடி கண்கள் கொண்டவர்கள் – தீமையும், நன்மையையும் பார்த்து நன்மையை செயல்படுத்த சித்தமாயிருக்கும் கண்கள்!!!
எட்டு அல்ல, ஆயிரம் ஆயிரம் கரங்கள் கொண்டவர்கள், நாடு, ஊர் செழிக்க வேண்டி அனைவரையும் அனைத்துசெல்ல!!!
ஒரு வேளை, இவர் கூறுகிற படி, ஹிந்துத்துவ சார்பு அமைப்பாக இருக்கும்பட்சத்தில், நான் இன்னமும் முனைப்போடு செயல்பட முனைவேன்!
நாங்கள் என்ன பேருந்தை எரித்தோமா? பத்திரிகை அலுவலகத்தை அதன் ஊழியருடன் சேர்த்து கொளுத்தினோமா? அந்நிய சக்திகளுக்கு நாட்டை விலை பேச முயற்சித்தோமா?
கலிகாலத்தில் தேச நலன் என்று பேசினால் அது தீவிரவாதமாக, மத அடிப்படைவாதமாக பேசப்படுகிறது!!!
